பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநிச்சயம்’ நியாயபிந்து, சம்பந்த பரீட்சை, ஹேதுபிந்து, வாதன்யாயம், சமாளுந்தர சித்தி-முதலியவை. பெளத்த சமயப் பிரிவினரில் மஹாயனர்களும் அவர் களுள்ளும் விஞ்ஞானவாதிகளும் அளவையில் அக்கறை காட்டியுள்ளனர். தின்னகருக்கு முன்பு பெளத்த அளவை நூல் எதுவும் இல்லை. வேதவியாசர், கிருதகோடி, ஜைமினி முதலிய வைதீக சமயச் சார்புடையோரின் நூல்களும், அவற்றின் உரைகளுமே நிலவியிருந்தன, மணிமேகலையில் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை'யில் பெளத்த அளவை நூலின் சுருக்கம் முழுவதை யுமே சர்த்தனர் கூறுகிறர். இப்பகுதியில் வைதீக நெறியினரின் கருத்துக்களை மறுக்கும்பொழுது தின்னகரின் கூற்றுக்களையும், எடுத்துக் காட்டுகளையும் சாத்தனர் பெரிதும் பின்பற்றுகிருர், தருமகீர்த்தியின் நூல்களில் காணப்படும் உதாரணங்கள் பல மணிமேகதிையில் காணப்படினும், அவை தின்ஞகரைப் பின்பற்றிய விடங்களிலேயே உள்ளன, இக்கூற்றினை விளக்கச் சிற்சில உதாரணங்கள் காட்டுவோம். "சுட்டுணர்வு' பற்றி மணிமேகலே சொல்லுவது : 'ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச் சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனக்சொல்லி விட்டனர்”, - காட்சியாவது கண் முதலிய பொறிகளால் வண்ண முதலிய வற்றைப் பற்றிக் காண்டல் முதலியன செய்து, காணப்படும் பொருளின் இயல்பை இடம், காலம், பொருள், ஒளிகளோடு படுத்துக் கிட்டிய நாமசாதிக் குணக்கிரியையின் அறிவ தாகும்' என்று அளவை நூலார் கூறுதலால் அவரின் வேறு படுத்தற்குச் சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனச் சொல்லி விட்டனர்" என்றும், நாமசாதி குணக்கிரியையின் ன்வத்தறி யும் இலக்கணம் காட்சிக்கேயன்றிக் கருத்தளவைக்கும் த. த-12 董8盈