பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரலின் அஃது அதிவிருத்தியாதல் கண்டு அவை விட்டனர் என்தும் கூறிஞர்”. வைதீக நியாயவாதிகளோடு பெளத்த அளவைவாதிகள் வேறுபடும் இடத்தைத் தின்னுகரே முதலில் குறித்தார். அவருடைய இக்கருத்தைத் தரும கீர்த்தியின் நூலான நியாயபிந்துவின் உரைகாரர் மேற்கோள் காட்டு கிருர், 'நாமசாதி முதலியவற்றைத் திக்நாகர் பஞ்சவிதக் கற்பனையென்றும் இவையாவும் அனுமான அனுமேய பாவம் என்றும் கூறுவர்”. மேற்கூறியது நியாயபிந்து உரைகாரர் கூற்று. அனுமானத்தில் பிழையற்ற அனுமானத்தையும் பிழை பட்ட அனுமானத்தையும் விளக்குமிடத்து மணிமேகலை கதுவது : காரண காரிய சாமானியக் கருத்து ஒரில் பிழைக்கையும் உண்டு ஏனைய அளவைகளெல்லாம் கருத்தினில் ஆன முறைமையின் அனுமானமாம் [அனுமானங்கள் மூவகைப்படும். அவை காரண அனுமானம், காரிய 'அனுமானம் சாமானியானுமானம் என்பவை அவை. பொதுப்பட நோக்குமிடத்து அவை பிழைத்து உண்மையறிய உதவாமற் போவதும் உண்டு. அவற்றில் வழுப்படாதது கனலில் புகை போல என்று காரியானுமானம் ஒன்றேயாகும். மற்று ஆகம முதலாகக் கூறப்பட்ட அளவைகளெல்லாம் வழியளவைக்குறியன வாகும் முறைமையினையுடையவாதலால் கருத்தளவைக்குள் அடங்கும்; பிழைபடாத அனுமானமான காரியானுமானத் திற்கு இங்கு உதாரணம் கூறப்பட்டது. பிழைபட்ட வற்றிற்கு உதாரணங்கள் சொல்லப்படவில்லை. மேற்கூறிய உதாரணம் தின்னகரது நூல்களில் உள்ளன. பிழைபட்டன வற்றிற்கும் அந்நூலில் எடுத்துக்காட்டுகள் காணலாம். சாமானியத்திற்கு 'கானத்தில் எழும் யாக்சையொலி இன்ன விடத்தில் என்று காட்டப்படாதது பிழை என்றும், காரணுனுமானம் முகில் காரணமாக மழை பெய்யுமென்பது 182