பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்தனர் காவியக் கவிஞர். வாணிபம் புரியும் இல்லறத்தாரேயன்றி, பிக்குவாகக்கூட மாறவில்லை. எனவே அவருக்குக் குறிப்பிட்ட பெளத்தப் பிரிவில் ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியமில்லை. பெரிதும் ஒரு பிரிவினருடன் தத்துவ உடன்பாடிருப்பினும், தன் காலத்து வைதிக அளவையை மறுக்கப் பெளத்த அளவைநெறி தேவை யாயிற்று. இவர் ஒர் அளவை நூல் பண்டிதரல்லர். எனவே தனக்கு முன்னிருந்த பெளத்த அளவை நூல்களை அவர் பயன் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அறவணர் பெளத்த தேரராதலால் பெளத்த அளவை நூலையே கையாள முடியும். சில அளவைக் கருத்துக்களை நாகார்ச்சுனர் கூறியுள்ளார். முழுமையாக அவற்றை வளர்ச்சி பெறச் செய்து எழுதியவர் தின்னுகரே. அவருக்கு முன் வளர்ச்சி பெற்ற அளவைக் கருத்துக்கள் பெளத்த நெறியில் தோன்றவில்லை. எனவே தின்னுகரின் கருத்துக்களையே சாத்தனர் கூறிஞர் என்பதே பொருந்தும். மேலும் வரையறை. எடுத்துக்காட்டு அனைத் தினும் பெரும்பான்மை நியாயப் பிரவேசத்திலிருந்து அப்படியே சாத்தனர் பெயர்த்தெழுதியது போலத் தமிழ்ப் படுத்தியுள்ளார் என்பது ந. மு. வே. உரையையும் மணிமேகலை வரிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போர்க்கு விளங்கும். தின்னகரது காலத்திற்குச் சில நூற்ருண்டுகளுக்குப் பின் அவருடைய நூல்கள் வழக்கொழிந்து போயின. ஆனல் திபெத்தில் அந்நூல்களின் திபெத்திய மொழி பெயர்ப்புகள் காணப்படுகின்றன. மணிமேகலை காலத்தில் அவருடைய நூல்கள் வடமொழியிலேயே தமிழ் நாட்டில் கிடைத்திருக்க வேண்டும். அதனையே சாத்தனர் பயன்படுத்திக் கொண் டிருக்கிருர். எனவே இன்று அகப்படாத நூல்களிலிருந்து அவர் காட்டும் உதாரணங்கள் நியாயபிந்து உரையில் காணப் படுகின்றன. பழைய உரையாசிரியர் தின்னகரின் நூல்களி விருந்து அவை எடுத்தாளப்பட்டன என்று குறிப்பிடுகிருர். தவிரவும் அளவை நூல் வல்லுநரான திக் நாகருக்கு காவியப் புலவரான சாத்தனர் அளவை நூற் கருத்துக்களைக் 184