பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பித்தார் என்று கூறுவது மீன்குஞ்சுக்கு மனிதன் நீந்தக் கற்றுக்கொடுத்த கதையாகவே தோன்றுகிறது. அதன்றி, சாத்தனர் அளவை நூல் அறிவனருடையவை என்பதும், அவருடைய கருத்துக்களைச் சாத்தளுர் கூறினு ரென்பதும், ந. மு. வே. அவர்கள் கருத்து என்று கொண்டால் சில கேள்விகளும் தடைகளும் எழுகின்றன. அறவணர் எழுதிய நூல்கள் எவை? அவர் இக்கருத்துக் களே எந்த நூலில் கூறியுள்ளார்? அவர் எழுதிய நூல்கள் எம் மொழியில் உள்ளன ? இவ்விளுக்களுக்கு விடை கூருமல் அறவணர் கருத்துக்களைச் சாத்தனர் பின்பற்றினர் என்ற முடிவுக்கு வரமுடியாது. அறவணர் எந்த நூலும் எழுதியதாக ந. மு. வே. கூறவில்லை. மயிலே சீனி வேங்கடசாமி அவர்களும் அறவணரைத் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெளத்தப் பெரியார்களுள் ஒருவராகக் கருதுகிருர்கள். அதற்குச் சில சான்றுகளும் காட்டுகிருர்கள். அத்தகைய ஒரு பெரியார் வரலாற்று மனிதரா இல்லையா, என்பது இங்குப் பிரச்சினையன்று. அறவணரது தர்க்கவியல் கருத்துக்களேத் திக்நாகர் பின்பற்றிஞரா, அன்றி திக்நாகர் கருத்துக்களை அறவணர் வாயிலாகச் சாத்தனர் எடுத்தாள் கிருரா என்பதே பிரச்சினை. அறவணர் பெளத்த சமய நூல்களை எழுதியிருந்தால் எந்த மொழியில் எழுதியிருப்பார்? தேரவாதியாயிருந்தால் பாலி மொழியில் எழுதியிருப்பார். மஹாசங்கிகராயிருந்தால் பிராக்கிருதத்திலோ, சமஸ்கிருத உரைநடையிலோ எழுதி யிருப்பார். எந்நாட்டில் பிறந்தவராயிருப்பினும், தேர வாதிகள் பாலியிலும், மஹாசங்கிகர்கள் சமஸ்கிருதத்திலும் நூல்கள் எழுதியிருக்கிருர்கள். பாலி மொழி வழக்கொழிந்த பிறகும் கூட அது தேரவாதிகளின் சமய மொழியாக நீண்ட காலம் நிலைத்திருந்தது. தமிழ் நாட்டில் பிறந்தவர்களா யினும் மஹாயணிகளான திக்நாகரும், தர்மபாலரும் சமஸ்கிருதத்தில்தான் எழுதிஞர்கள். அறவணர் அளவை 蠶壽壽