பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் எழுதியிருந்தால், தமிழ்நாட்டு பெளத்தத் தேரர்களான சங்கமித்திரர் போன்றவர்களும் மஹாயணிகளான திக்நாகர், தர்மபாலர் போன்றவர்களது நூல்கள் நிலைத்திருக்கும் பொழுது இவருடைய நூல்கள் மட்டும் எங்கே மறைந்து போய் விட்டன ? எனவே தின் ஞகருடைய கருத்துக்களே இந்நூலில் எடுத் தாளப்பட்டிருக்கின்றன என்றே கொள்ளவேண்டும். மேலே எடுத்துக் காட்டிய காரணங்களால் நாம் கீழ் வரும் முடிவுகளுக்கு வரமுடிகிறது. - 'பிரிவின்றி நிலைத்திருந்த பெளத்தம் காலசோகன் காலத் தில் தேரவாதமாகவும், மஹற்ாசங்கிகமாகவும் பிரிந்தது. ஒழுக்க முறையில் அழுத்தம் கொடுத்துப் பாலி நூல்களைத் தேரவாதிகள் ஏற்றுக்கொண்டனர். மக்களிடையே பரப்ப வேண்டிய சமயமாக பாலி நூல்களுக்குப் பொருள் கூறவும் அதங்கேற்ப புத்தருக்குப் புதிய பண்புகளைப் புனையவும் மஹாசங்கிகர்கள் முனைந்தனர்; இவர்களிருவரும் மன்னர் பாதுகாப்பையும், மக்கள் ஆதரவையும் பெற முனைந்தனர். இத்தத்துவப் போராட்டங்கள் மகத முதல், புஷ்பபுரம் வரை வடநாடு முழுவதிலும் நடைபெற்றன. இப்பிரிவுகள் தோன்றிய நூருண்டுகளுக்குள்ளாக 18 பிரிவுகள் பெளத்தத் தில் தோன்றி விட்டன. இப்பிரிவுகள் தோன்றி 200 ஆண்டு களுக்குப் பின்னர், அசோக மெளரியனது காலத்தில் தேர வாதப் பிரிவுக்ள் பல தோன்றி விட்டன. அனைவருக்கும் பொதுவான கொள்கைகளை வகுக்க நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. தேரவாதிகள் தங்களுள் சிலரை மேலும் விரட்டியதே இதன் விளைவாகத் தோன்றுகிறது. அசோகன் எல்லா பெளத்த பிக்குக் குழுவினருக்கும், முக்கிய மாக தேரவாத பிக்குகளுக்குத் துார தேசங்களுக்குச் சென்று அறத்தைப் பரப்ப உதவி செய்தான். அக்காலத்தில்தான் தெற்கே பெளத்தம் பரவியது. முதலில் தெற்கே அறம் போதிக்க வந்தவர்கள் தேரவாத பிக்குகளே. - 靈壽尊