பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னல் செல்வாக்குப் பெற்ற மஹாசங்கிகர்களும், சைத்யர்களும் தென்னடுகளில் பரவினர், தமிழ்நாட்டில் அவர்களிருந்தமை பிராமிச் சாசனங்களால் தெரிகிறது. இவ்விரு பிரிவினர்களது பல உபபிரிவுகள் இங்கிருந்தன என்பதை மகாவம்சத்தில் இலங்கைக்குத் தமிழ் நாட்டி லிருந்து வந்த பிக்குகளின் பெளத்தப் பிரிவுகளின் சார்புகள் புலப்படுத்துகின்றன. கி. பி. 3 முதல் 6ம் நூற்ருண்டுக் காலத்தில் பள்ளிகள், சைத்யங்கள் கட்டப்பட்டிருந்த செய்தி களே அக்காலத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இது மஹாசங்கிகர்களின் ஒரு பிரிவினரான சைத்யகர்கள் கட்டு விப்பதில் வெற்றி பெற்றிருந்தனர் என்பதைக் காட்டும். எனவே இருபெரும் பிரிவினரும் தமிழ் நாட்டில் அறம் போதித்தனர், - இப்பின்னணியில் இந்நூலில் அறவணர் விளக்கும் பெளத்தக் கொள்கைகள் எவை என்ற வினவிற்கு விடை யளித்தல் வேண்டும். பாலி பிடகங்களின் மொழி பெயர்ப்பாக அறவணரின் போதனைகள் உள்ளன என்ற காரணத்தால், மணிமேகலையின் பெளத்தம் தேரவாதம் என்று சிலர் சொல்லுவதை முன்னர் கண்டோம். பிற பிரிவினர் பாவிபிடகங்களை மறுப்பதில்லை. அதை ஒப்புக்கொண்டுதான் அது முதற்படி உண்மை யென்றும், அதற்கு மேலாகத் தங்கள் பிரிவினரின் துரல்கள் இரண்டாம்படி உண்மையைக் கூறுவதாகவும் வாதிட்டனர். இதை முன்னரே விரிவாகப் பார்த்தோம். புத்தர து தன்மை, அவரது பிறப்பு, முதலிய முக்கிய அம்சங்களில் மணிமேகலை மஹாசங்கிகர்களது கூற்றுக்களையே பின்பற்று கிறது. அவர்களது கூற்றுக்களையே ரூபம், பிரக்ஞை, விஞ்ஞானம் ஆகிய மூன்று தத்துவக் கருத்துக்களில் மணிமேகலை பின்பற்றுகிறது. இங்குத் தேரவாதத்தினின்றும் வேறுபடுகிறது. மஹாயனர்களது இரு பிரிவுகளான சூன்யவாதம், விஞ்ஞான வாதம் ஆகிய கொள்கைகளின் செல்வாக்கு 蔓尊?