பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவனரது போதனைகளில் சிறிதேனும் இல்லை. இவற்றின் கொள்கைகளே முன்னரே விளக்கியிருக்கிறேன். மஹாசங்கிகர்களே பெளத்த சமயத்தில், தருக்க முறையை முதலில் பயன்படுத்தியவர்கள். பின்னர் மஹாயனர்கள் இதனைப் பெரிதும் வளர்ச்சி பெறச் செய்தனர். மஹா சங்கிகத்திலிருந்து தோன்றிய பிரிவுகள் அனைத்திற்கும் இத்தருக்க முறைகள் பொதுவாயின. தேர வாதிகளும் பிற்காலத்தில் இம்முறையினை ஏற்றுக்கொண்டு, தின் ஞகரின் நூல்களைப் பின்பற்றித் தாங்களும் பல நூல்களை இயற்றிக் கொண்டனர். தத்துவக் கொள்கைகளிலும், சமயக் கொள்கைகளிலும், அறவனர் அறவுரையில் மஹாசங்கிகக் கொள்கைகளே பெரிதும் காணப்படுகின்றன. பிற்கால பெளத்த சமய வளர்ச்சிக் கட்டத்தில் தோன்றிய புத்தர் பற்றிய கருத்துக் களும் இந்நூலில் காணப்படுகின்றன. தேரவாதத்தில் காணப்படாத தத்துவ அப்பாலைத் தத்துவங்களும், தருக்க வியல் கருத்துக்களும் இந்நூலில் உள்ளன. பிக்குகளின் ஒழுக்க முறையாக மட்டுமில்லாமல், தானத்தையும் சீலத்தையும் வற்புறுத்துவதாகவும், சமயமாகப் பரப்பப்படு வதற்கேற்ற இயல்புக் கூறுகள் கொண்டதாகவும் இந்நூல் விளங்குகிறது. 贾爵露