பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் (இந்தியப் பொருள் முதல்வாத தத்துவத்தைப் பற்றி வடமொழிச் சான்றுகளிலிருந்து ஆதாரங்கள் திரட்டி சில ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளார் கள் . அவ்வாறு ஆராய்ந்து எழுதியவர்களில் முக்கியமானவர்கள் தாஸ்கு ப்தா, தகதிண் தாராயண் சாஸ்திரி, 2 சக்கர வர்த்தி நயினர் 3 முதலியவர்கள். இவர்கள் ஆன்மீகவாத தத்துவச் சார்புடையவர்கள். தேவிப்பிரசாத் சட்டோ பாத்யாயாவும், 4 கே. தாமோதரனும்3 மார்க்சிய ஆய்வுமுறையை பயன்படுத்தி இத்தத்துவம் இந்திய நாட்டில் நிலைகொண்டிருந்ததை நிரூபித்து, அதன் தத்துவக் கூறுகளையும் கொள்கைகளேயும் விளக் கிஞர்கள், பொருள்முதல்வாதம் அ ல் ல து உலகாயதத்தைக் கூறும் நூல்கள் எவையும். உலகாயதர் எழுதியவையல்ல உலகாயதருடைய கொள்கைகள் இவை என்று வைதீகர்கள், சமணர், பெளத்தர், நியாய வைசேவிகர் ஆகிய வேறு கொள்கையினர் கூறுவதைத் தொகுத்து உலகாயதத்தை வரையறுத்துக் கூறுகிருர்கள். இதனைப் பூர்வபட்சம் என்று நியாய நூலார் கூறுவார்கள். இந் தி ய த் தத்துவவாதிகள் அனைவருடைய நூல்களும் சமஸ்கிருதத்தில் 190