பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாரிக்குரல் அறுத்து, தினப்பிறப்பு இரீஇ, د*« சொல்லாற்றுக் கவலை பயம் கறங்கு தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா! வேற்றுப் பெருந்தெய்வம் பேருடன் வாழ்த்தி - (அகம் 262) வேலன் வெறியாடல் தலைவி நோய்க்கு மருந் தாகாது. இச்சிறு தெய்வத்தின் சக்தி தனக்குக் காதல்நோய் தந்த பெருந்தெய்வமான மலே நாட்டுத் தலைவனின் சக்திமுன் வெல்லாது. இங்கு வேலனையும் அவன் வணங்கும் முருகனையும் அற்பச் சக்தியுடைய சிறு தெய்வமெனத் தலைவி இகழ்ந்து பேசுகிருள்.1 முருகனக் களத்திலும், ஊர் மன்றிலிலும் வெறியாடி வழிபடுவது பெருவழக்கமாயிருப்பினும், அபூர்வமாகச் சில் விடங்களில் முருகனுக்குக் கோவில்கள் இருந்தனவென்பதை புறநானூற்றில் வரும் முருகன் கோட்டம் (புறம் 299) என்ற சொற்ருெடர் காட்டும். அக்காலத்திலேயே அவனுக்கு ஒரு மனைவியிருந்தாள். சக்க கால இலக்கியப் பரப்பில் (பரிபாடல் திருமுருகாற்றுப் படை தவிர இவை பிற்காலத்தவை முருகன் கருத்து, வடநூல் சான்றுகள் கருத்துக்களோடு இணைந்து வளர்ச்சி பெற்ற தியிைல் சித்திரிப்பதால்), மிக எளிமையானதும், பிற பண்பாட்டுக் கருத்துக்கள் இல்லாததுமான கருத்துக் கனேக் கூறும் நூல்கள் முந்தியவை. இக்காலத்திலேயே முருகனுக்கு ஒரு மனைவியையும் கற்பனை செய்திருந்தார்கள். பிற்கால வழக்குப்போல இரு மனேவியர்கள், தேவயானை, வள்ளி என்ற இருவரைப் பற்றிய குறிப்புகள் முற்கால சங்க இலக்கியத்தில் கிடைக்கவில்லை. பரிபாடல் காலத்திற்குப் பின்னரே முருகன் இருமனைவியரின் கணவனுகச் சித்திரிக்கப்படுகிருன் தமிழ் நாட்டில் அவனது 駕