பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலகேசியிலும் அவ்வக் காலத்துத் தத்துவங்களின் வருணனை களும், விவாதங்களும் இடம் பெறுகின்றன. இவையிரண் டிலும் பெளத்தனும், சமணனும் தங்கள் தங்கள் சமய நோக்கிலிருந்து உலகாயதம் அல்லது பூதவாதத்தை எதிர்க் கிருர்கள். நீலகேசியின் காலம் 5ஆம்நூற்ருண்டு என்றும் அதன் உரையின்காலம் 9ஆம் நூற்ருண்டு என்றும் தமிழ் இலக்கிய வரலாற்ருசிரியர் கூறுவர். இவ்விரண்டு நூல்களில் பூர்வபட்சமாகக் கூறப்படும் உலகாயதம் பற்றிய செய்திகளே இந்நூல்களின் காலத்தில் வழங்கிய தத்துவக் கருத்துக்களா கவும், உரைகளில் வழங்கும் கருத்துக்களே உரையாசிரியர் களது காலத்துத் தமிழ்நாட்டுத் தத்துவ ஆசிரியர்கள் அறிந் திருந்த கருத்துக்கள் என்றும் ஏற்றுக் கொள்வதில் முரண்பாடு எதுவுமில்லை. எனவே புறநானூறு, பத்துப் பாட்டு, மணிமேகலை, நீலகேசி, மணிமேகலை பழைய உரை, நீலகேசி பழைய உரை ஆகிய சான்றுகளிலிருந்து கி. மு. 2-ம் து.ாற்ருண்டுமுதல் இ. பி. 9-ம் நூற்ருண்டு வரை சுமார் ஆயிரத்திருநூறு ஆண்டுக்காலத்தில் உலகாயதம் வரலாற்று ரீதியாக மாறி வந்திருப்பதைக் குறித்து ஆராயமுடியும். அத்தகைய ஆராய்ச்சியை இக்கட்டுரையில் மேற் கொள்ளுவோம். இவ்விடத்தில் உலகாயதம் அல்லது பொருள்முதல் வாதம் என்ருல் என்ன என்பதைக் குறிப்பிடுவோம். உலக தத்துவங்களனைத்தையும் இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று பொருள்முதல்வாதம், மற்ருென்று கருத்துமுதல் வாதம். இவற்றையே உலகாயதம், ஆன்மீகவாதம் என்றும் கூறலாம். இவையிரண்டும் நேர்முரளுன கண்ணுேட் டங்கள். இப்பிரபஞ்சத்திற்கு அடிப்படையாது? பிரபஞ் சத்தின் பொருள்கள், சக்திகள், உயிர்கள் இவையாவும் எதன் அடிப்படையில் தோன்றின? இவ்வினவிற்கு இரு விடைகளைத் தத்துவங்களில் காணலாம். பிரபஞ்சமும் இயற்கை ஆற்றலும், உயிர்களும் எல்லாம் பொருள்களின் சேர்க்கையாலும், மாறுபாடுகளாலும் நிலைபேறுகொண்டு இயங்குகின்றன. பிரபஞ்ச வாழ்க்கையின் அடிப்படை 193