பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளே ஆகும், என்ற எண்ணமே உலகாயதம் அல்லது பொருள்முதல்வாதம் எனப்படும். இதற்குமாருக பிரபஞ்சத்தின் நிலைபேறு, இயக்கம் இவற்றிற்குக் காரணம் பொருளின் வேறுபட்ட ஒர் ஆற்றல். அது பொருண்மை யுடைதன்று; பொருளினின்றும் தோன்றுவதல்ல; அது பொருளுக்கு முன்னரேயே இருந்தது. பொருளே அதனை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, அதனே ஆன்மா, பரிபூரணம், கருத்து, பிரம்மம், புருஷன், கடவுள் என்ற பல பெயர்களேச் சொல்லி அழைக்கிருர்கள். இத் தத்துவம் ஆன்மீகவாதம், அல்லது கருத்துமுதல்வாதம் என அழைக்கப்படும். எது முதலில் தோன்றியது? எது பிரபஞ்ச இயக்கத்திற்கு அடிப்படையாகவுள்ளது? பொருள் தான் என்று கூறும் தத்துவம் பொருள் முதல் வாதம். பொருளல்லாத ஆன்மா போன்ற சக்திகள் என்று கூறும் தத்துவங்கள் கருத்து முதல்வாதத் தத்துவங்கள். ஒவ்வொரு பண்டை நாகரிக நாட்டிலும் இவ்விரண்டு கருத்துக்களும் தோன்றி ஒன்றையொன்று எதிர்த்து வாதிடு கிறபொழுது வளர்ச்சி பெற்றுள்ளன. தமிழ் நாட்டில் உலகாயதத்தின் வளர்ச்சியை இக் கட்டுரையில் விவாதிப்போம். தென்னிந்தியாவில் உலகாயதம்புத்தர் காலத்திற்கு முன்பு కిణGఆకొ” என்ற காவியத்தின் பதிப்புரையில் பேராசிரியர் அ. சக்கர வர்த்தி நயினர், தமிழ்நாட்டில் பூதவாதம் வழக்கில் இருந்ததைக் குறித்து எழுதுகிரு.ர்.