பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமஸ்கிருத நூற்சான்றுகளே. தமிழ் இலக்கியச் சான்றுகளை அவர்கள் ஆராயவில்லை. தென்னிந்திய இலக்கியங்களில் தமிழைத் தவிர பிற மொழி இலக்கியங்களின் தொன்மை கி. பி. 10ஆம் நூற்ருண்டிற்கு முற்பட்டதில்லை. தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்கள் என்றழைக்கப்படும் நூல்கள் கி. மு. 2-ம் நூற்ருண்டு முதல் கி. பி. 3-ம் நூற்ருண்டு முடியவுள்ள காலத்தில் எழுதப்பட்டவை. எனவே அந்நூல்களிலும், அதைத் தொடர்ந்து கி. பி. 5-ம் நூற்ருண்டிற்குப் பிற்பட்ட சில நூற்ருண்டுகளில் தோன்றிய சமண பெளத்த நூல்களிலும் உலகாயதத் தத்துவக் கருத்து களைத் தேடிக் கண்டு பிடிக்கலாம். ஆதாரங்களின் இயல்பு இந்த ஆதாரங்களின் தன்மையை அறிவதற்கு, அவற்றின் பொருளடக்கம் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். முக்கியமாகப் புறநானுாற்றிலிருந்து நான் ஆதாரங்களைக் கொடுக்கப் போவதால் இந் நூலின் பொருளடக்கம் பற்றி இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியம். சங்க நூல் களனைத்தும் தொகை நூல்கள். நீண்ட இடைவெளிக் காலத்திலே வாழ்ந்த புலவர்கள் இயற்றிய பாடல்கள் அவர்களுடைய காலத்திற்குச் சிறிது காலத்திற்குப் பின்னர் தொகுக்கப்பட்டன. இப் பாடல்களின் பொருள் அகம், புறம் என்ற இரு பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்படும். அகம், மணத்திற்கு முந்திய ஆண் பெண் இணைவிழைவுணர்ச்சி யையும், மணத்திற்குப் பிந்திய பாலுணர்வையும், சருப் பொருளாகக் கொண்டது. புறம், அகம் தவிர சமூக வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கருப் பொருளாக உடையது. புறநானூறு 400 பாடல்கள் கொண்ட நூல். இந்நூலில் பழந் தமிழரின் சமூக வாழ்க்கைக் காட்சிகளும், கருத்துகளும் பரந்து காணப்படுகின்றன. தமிழரின் உலகியல் வாழ்க்கையின் பல கூறுகளைப் பற்றிய பாடல்களே இந்நூலில் காணலாம். மலைச்சரிவில் வாழ்ந்த மலைவாழ் இனக்குழு | g :