பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களின் வாழ்க்கை, ஆற்றங்கரையில் வாழ்ந்த உழவர்களின் வாழ்க்கை, இனக்குழு மக்களிடையேயும், வேறு சமூகங் களிடையேயும் நடைபெற்ற போர்களைப் பற்றியும் இனக் குழுத் தலைவர்கள், முடிமன்னர்களோடு நடத்திய போர் களைப் பற்றியும், பசு நிரை கவர்தலையும் அதனல் ஏற்படும் போர்கள் பற்றியும், பாணர் என்னும் பாடகர்கள் தங்களுக்குப் பரிசில் தரும் மாமன்னர்கள், குறுநில மன்னர்கள் முதலியோரைப் புகழ்ந்து பாடும் வாழ்த்துக்கள் பற்றியும், புலவர்கள் மன்னர்களுக்கும் மக்களுக்கும் போதிக்கும் நீதிகள் பற்றியும்; இன்னும் அக்கால கட்டத்தின் சமூக வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய கருத்துரை களும், இந் நூலில் காண்கிருேம். இந் நூலே ஆழ்ந்து படித்தால் இனக்குழு (Tribal) வாழ்க்கை அழிந்து, நிலவுடைமைச் சமுதாயம் வளர்ச்சி பெறுகிற காலத்தை இந் நூலில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் குறிக்கின்றன என்றறியலாம். சங்க நூல்களிலே காலத்தால் பிற்பட்டவை, இனக்குழுத் தலைவர்களுக்கும், முடி மன்னர்களுக்கும் இடையே நடைபெற்ற போர்களைப் பற்றிப் பேசாமல், சேரசோழ பாண்டியர்களிடையே நடைபெற்ற போர்களையே குறிப்பிடுகின்றன. எனவே சங்க நூல்களின் இறுதிக் காலத்தில் இனக்குழுக்கள் அழிந்து, நிலவுடைமையும், மன்னர் ஆட்சியும் தோன்றிவிட்டன என்று யூகம் செய்யலாம். சுமார் கி. பி. 8ஆம் நூற்ருண்டில், மேற்கு மலைச்சரிவுகளைத் தவிர தமிழ் நாட்டின் மற்றப் பகுதிகளில் இனக்குழு வாழ்க்கை முற்றிலும் அழிந்து போய்விட்ட தென்று புலப்படுகிறது. இம் மலைப்பகுதிகளுடன் பாணர், பாடினியர் விறலியர் என்ற நாட்டுப் பாடகர்கள், கலைஞர்கள் மூலம் பண்பாட்டுத் தொடர்பும், இணைப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே இக் காலம் இனக் குழுக்கள் அழிந்து, நிலவுடைமை தோன்றிய காலம். முதல் ஆதாரம்-புறப்பாடல்கள் முதல் ஆதாரம் புறத்தொகை நூல்கள் இதன் தன்மையை மேலே விரிவாகக் கூறினேன். இந் நூல்களில்

  1. $ 6