பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்வரும் விளுக்களுக்கு விடைகளை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையைப் பற்றி புலவர்கள் கண்ணுேட்டம் என்ன? வாழ்க்கை உண்மையானதா, மாயைத் தோற்றமா? வாழ்க்கையை நுகர வேண்டும் என்று புலவர்கள் கூறுகிருர்களா, அல்லது துறத்தல் வேண்டுமெனக் கூறுகிருச் களா? பிரபஞ்ச அமைப்புப் பற்றி அவர்களுடைய கொள்கை என்ன? நீதிக் கொள்கைகள் எவற்றையாவது அவர்கள் போதிக்கிரு.ர்களா? இக் கேள்விகளுக்கு ஏதாவது ஒரு வழியில் சங்க காலப் புலவர்கள் தங்கள் பாடல்களில் விடை யளிக்கிரு.ர்கள். இரண்டாவது ஆதாரம் பெளத்த சமண காப்பியங்கள் மணிமேகலேயும், நீலகேசியும், இரண்டாவது リrリ மாகக் கொள்ளப்படும். முதல்நூல் பெளத்த காவியம். இரண்டாவது சமண காவியம் ஒரு கதையைப் பொருளாக கொண்டிருப்பதோடல்லாமல், இந் நூல்களில் வெவ்வேறு: தத்துவ வாதிகளின் தத்துவங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. மணிமேகலை சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில்’ பல தத்துவங்களைப் பற்றிய விவரங்களே அளிக்கிறது. இந் நூலின் காலம் கி. பி. 8ஆம் நூற்ருண்டு. இரண்டாவது நூலின் காலம் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. கி. பி. 5 முதல் 9ஆம் நூற்ருண்டுவரை, இதன் காலத்தைய பற்றிப் பலவாருகப் கூறப்படுகிறது. எவ்வாருயினும் இந் நூல் மணிமேகலைக்குச் சில நூற்ருண்டுகளுக்குப் பின்னர் தோன்றியது என்பதில் ஐயமில்லை. இவையிரண்டிலும் பூதவாதம் பற்றிய விவரங்கள் உள்ளன. மணிமேகலையில் தான் முதன்முதலாக பூதவாத கருத்துகள் முழுமையானக் வடிவத்தில் தொகுத்து கூறப்பட்டு உள்ளன. அதற்கு முன்னர் தோன்றிய நூல்களில் பூதவாதத்தின் கூறுகனே விளக்கப்பட்டுள்ளன. ஆளுல் இங்கே.பூதவாதக் கருத்துக்கன் மணிமேகலையின் எதிரியின் கருத்தாக, பூர்வபட்சமாகக கூறப்படுகிறது. - த.த ! 3. Í 97