பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை உரை நடுக்கால உரைகாரர் ஒருவருடைய உரை மணிகேலேயில், நமது ஆய்வுக்குத் தேவையான பகுதிகளுக்குக் கிடைக் கின்றன. இவ்வுரையில் நீலகேசி உரையில் காணப்படும் தத்துவச் செய்திகள் காணப்படுவதாலும், நீலகேசியில் காணப்படும் கருத்துக்களுக்கு மறுப்புரைகள் காணப்படுவ தாலும், இவ்வுரையின் காலம், நீலகேசியின் உரையின் காலத்திற்கும் பிற்பட்டதாதல் வேண்டும். எனவே நீலகேசி காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட கருத்து மாற்றங்கள் சிலவற்றை இவ்வுரையில் காணலாம். முக்கியமாகத் தருக்க நூல் கொள்கைகள், உலகாயதத்தில் சில உட்பிரிவுகள், ஆகிய இரண்டு பொருள்களைப் பற்றி இவ்வுரை முக்கியமான விவரங்களே அளிக்கிறது. இவ்வுரைகாரருக்குச் சரித்திர உணர்வு இருப்பதால் தருக்கக் கருத்துக்களை வரலாற்று ரீதியாகச் சொல்லுகிருர். அவரது எழுத்துக்கள் இந்த ஆய்வுக்குப் பயன்படும். இந்த ஆதாரங்களே நான் பயன்படுத்தியிருப்பதோடு, சில அம்சங்களில் இவை தரும் செய்திகளை வடமொழிச் சான்றுகளோடு ஒப்பிட்டும் ஆராய்ந்திருக்கிறேன். புறப்பாடல்களின் பொருளடக்கம் பாடல்களின் கருப்பொருள் வேறுபாட்டைக் கொண்டு பழம் பாடல்கள் அகம் புறம் என்று பிரிக்கப்பட்டன என்று முன்னர் குறிப்பிட்டேன். இவ்விரண்டுவகைப் பாடல்களின் கருப்பொருளும் சேர்ந்ததுதான் உலகியல் வாழ்க்கை இவ்வுலக வாழ்க்கைக் கப்பால் வேருேர் உலகு பற்றி மிகச் சில பாடல்களே குறிப்பிடுகின்றன. கிரேக்கக் கவிஞர்களது கற்பனையில் படைக்கப்பட்ட வீரர் உலகான எலிஸியம்’ போன்றது அவ்வுலகு, இதனை தேவர் உலகு என்று பழந் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டனர். கடவுளர்களின் உலகு 麗9さ