பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பது இதன் பொருள். ஆளுல் தேவருலகு பற்றி குறிப்பிடும் மிகச் சில பாடல்கள் தவிர மிகப் பெரும்பான்மை யான் பாடல்களில் கருப் பொருள்கள் உலகியல் வாழ்க்கை பற்றியனவே. வாழ்க்கையில் இன்பம் பெறுவது என்பதை இக்கால மக்களுக்குப் போதிக்க மிகப் பல புலவர்கள் முயன்றிருக்கின்றனர். சமூக வாழ்க்கையில் மனிதன் பெறக்கூடிய இன்பத்தைப் பற்றிப் பல புலவர்கள் சிந்தித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர். தனிச் சொத்துரிமையும், அரசும் தோன்றிய காலத்தில் திருவள்ளுவர், அறம், பொருள் இன்பம். என்ற முப்பெரும் மனித லட்சியங்களே வரையறுத்துக் கூறினர். இவ்வுலகில் அறவாழ்க்கைக்கு செல்வம் துணையாகு மானல் அதுவே இன்ப வாழ்க்கை என வள்ளுவர் கருதுவார். இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பதே இன்ப வாழ்க்கைக்கு வழி என்ற கூற்றினே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மனித வாழ்க்கைக்குகந்ததாக ஏற்றுக்கொண்ட குறிக் கோள்கள் அறவாழ்க்கை பொருளீட்டல், இவையிரண்டால் ஏற்படும் இன்பமான இல்லற வாழ்க்கை ஆகிய மூன்றுமே பிற்கால சமய நூலார் கூறும் வீட்டினை வள்ளுவர் முக்கியமான குறிக்கோளாகக் கூறவில்லை. வாழ்க்கை உண்மையையும், வாழ்க்கையின்பத்தையும் மறுக்காமல் அவற்ருேடு உடன்பட்டு வாழ்க்கையில் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கோடுதான் மிகப் பெரும்பான்மையான புலவர்கள் பாடினர். சில விளுக்கள் புறப்பாடல்களில் காணப்படும் வாழ்க்கைத் துறவு எதிர்ப்பு மனப்பான்மை அல்லது வாழ்க்கை ஆர்வ மனப்பான்மைக்குக் காரணம் என்ன? பிற்காலப் புலவர் களும், சிந்தனையாளர்களும் ஏன் வாழ்க்கை மறுப்பையும், துறவையும் போற்றினர்? இவ்வுலகில் இன்பம் காண, £3.9