பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயலாது. வேருேர் உலகிலேயே இன்பம் காண இயலும் என்று ஏன் கூறினர்? உணர்ச்சிகளையும் ஆசைகளையும் துறக்கும் துறவை ஏன் எல்லாக் குறிக்கோள்களுக்கும் உயர்வாகப் பிற்காலத்து அறிஞர்கள் போற்றினர்கள்? புற இலக்கியத்தின் சமுதாய அடிப்படை புறப்பாடல்கள் சுமார் 500 ஆண்டுக் காலத் தில் இயற்றப்பட்டவை என்று முன்னரே கூறியுள்ளேன். வேட்டையாடும் இனக் குழு வாழ்க்கையும், ஆடு மாடு மேய்க்கும் இனக்குழு வாழ்க்கையும் அழிந்து, தனிச் சொத்துரிமையும், அரசும் தோன்றிய வரலாற்றுக் காலம் என்பதை மானிடவியல் நோக்கோடு சங்க இலக்கியத்தைக் காண்போர் அறியலாம். இத் நிலைகீரில் தொன்மைச் சமுதாயம் (Primitive tribal Society) off & filovaji oto otbijli (Feudal Society) தோன்றிய காலம். ஒரு புறம் தனிச் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட வர்க்க சமுதாயம். மற்ருெரு புறம் தொன்மைப் பொதுவுடைமைச் சமுதாயமும் ஏக காலத்தில் நிலவின. ஒன்று அழிந்து வந்தது; மற்ருென்று வளர்ந்து வந்தது. பழைய சமுதாயத்தின் குறிக் கோள்கள், கருத்துக்கள், தத்துவங்கள் முதலியன புதிதாகத் தோன்றும் சமுதாயத்தின் குறிக்கோள்கள், கருத்துக்கள், தத்துவங்களுக்கு மாறுபட்டனவாகவிருந்தன. தங்கள் காலக் கருத்துலகில் நின்றுகொண்டு, பழங்காலக் கருத்துலகை நிலவுடமைக் காலச் சிந்தனையாளர் கண்டனர். சமயம், கடவுள் என்ற கருத்துக்கள், இனக்குழு சமுதாயத்தில் இருக்க வில்லை. சடங்காச்சாரத் தொகுப்பே (Ritualism) சமயத் திற்குப் பதில் முன்னர் இருந்தது. இவ் விரண்டு சமுதாயத்தின் உலகக் கண்ணுேட்டங்கள் எதிர்த்துப் போரிட்ட காலத்தில்தான் சங்க இலக்கியங்கள் தோன்றின. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இந்த முரண்பாடு களுக்கும் நிலவுடைமையின் வளர்ச்சி நிலைக்கும் ஏற்றவாறு பண்பாட்டு, சிந்தனை வளர்ச்சி நிலைகளும் இருந்தன. 200