பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் மனவியான வள்ளியின் பெயரை நற்றிணை அடி யொன்றினல் அறிகிருேம். முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல (நற்றிணை 82) பழங்காலக் குறவர், எயினர், தானவர் போன்ற குறிஞ்சிநில மக்கள். (Food gatherers) புஞ்செய் அல்லது நஞ்செய் பயிர்த்தொழிலை மேற்கொண்ட ஆரம்ப காலத்தில் தோன்றிய கடவுட் கருத்து முருகன் ஆகும். அக்காலத்திலேயே தமிழர் வடநாட்டுப் பிராம்மணர், பெளத்த பிக்குகள், சமண முனிவர்கள், வணிகர்கள் போன்ற குழுக்களோடு பண்பாட்டு, வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். இதனால் பண்பாட்டுப் பரிமாற்றம் பல ஆம்சங்களில் நடைபெற்றது. இம்மாறுதல்களின் செல் வாக்கைப் பத்துப் பாட்டு. பரிபாடல், கலித்தொகை முதலிய நூல்களில் நாம் காண்கிருேம். முருகன் பற்றி வடநாட்டுக் கருத்துகள் எத்தகைய வளர்ச்சி நிலையில் இங்கு வந்தன ? இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டபோது இரண்டும் கலவை யுற்று என்ன மாறுதலடைந்தது என்ற கேள்விக்கு விடை காணுமுன்னர், வடநாட்டில் ஸ்கந்தன் கருத்து வளர்ச்சி யடைந்த வரலாற்றைக் கூறுவோம், வேதத்தில் ஸ்கந்தனைப் போன்றதோர் தெய்வத்தைப் பற்றிய பேச்சு மிகக் குறைவாகவே உள்ளது. அக்னிதான் வேதகாலத்தில் பிரபலமான தெய்வம். வேதகாலத்துக்கு பின்னும், உபநிஷத் காலத்துக்கு முன்னும், இடைக்காலத் தில் ஆரண்யக காலத்தில் சண்முகன் என்ற தெய்வம் குறிப் பிடப்படுகிறது. ருத்ரன், நந்தி, தந்தி, சண்முகன், கருடன், பிரம்மன், விஷ்ணு, நரசிம்மன், அக்னி, துர்க்கை, ஆதித்தன் என்ற தெய்வங்களின் பெயர்களில் ஸ்கந்தனின் பெயர் சண்முகன் என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு கருத்து மாற்றம் ஏற்பட்ட காலகட்டமாகும். சண்முக காயத்திரி யில் தேவர்களின் இவன் சேனையின் தலைவன் (தேவசேனபதி) 17