பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இனக்குழு அழிவு பற்றியும் அதன் சாரணமாக மனித சமுதாயத்தின் சிந்தனைப்போச்குகளில் ஏற்படும் மாறுதல்கள் பற்றியும் பேராசிரியர் தேவிப்பிரசாத் சட்டோ பாத்தியாயா கிறுவதைக் காண்போம். 7 'இனக்குழு அழிவு முழுமையாக இராமல், அரை குறையாக இருந்தால், இனக்குழு மக்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள் பண்பாட்டு மிச்சங்கள், அதற்கடுத்து உருவாகும் சமுதாயத்தில் எஞ்சி நிற்கும். அவற்றுள் சில நேர் முரளுன பொருளுடையதாக மாறிவிடும். இவை யிரண்டினின்றும் இலக்குழு சமுதாயத்தில் இக் கருத்துக்கள் இருந்த நிலைமையை நாம் அனுமானிக்கலாம். 'இனக் குழு சமுதாயத்தில் நிலவியமூலக் கருத்தை அறிவதே நமது பணி. இனக்குழு சமுதாயத்தில் மக்களின் உலகக் கண்ணுேட்டம் யாது? இனக்குழு சமுதாயத்தில் சமுதாயத்திற்காக எல்லோரும் உழைக்க வேண்டும். கூட்டு உழைப்பு என்னும் அடிப்படை மீது சமுதாய வாழ்க்கை ஆதாரப்பட்டிருந்தது. எனவே வாழ்க்கையிலும் உழைப்பு, உழைப்பால் பொருளே மாற்றமுடியும், பொருள் மாற்றங் களின் இயல்புகள் பற்றிய அறிவு, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை, மனித சக்தியில் நம்பிக்கை முதலிய கருத்துக்கள் இச் சமுதாயத்தின் உலகக் கண்ணுேட்டமாயிருந்தன. இதை உலகாயதக் கருத்துக்கள், உலகமெங்கிலும் இனக்குழு, மக்களின் உலகக் கண்ணுேட்டத்தை ஆராய்ந்த அறிஞர்கள். இனக்குழு மக்களின் கருத்துலகின் சிந்தனைகளுக்கு அடிப்படை உலகாயதம் அல்லது முன்னிலே உலகாயதம்' (Protomaterialism) என்ற முடிவுக்கே வந்துள்ளனர்.” இம் மேற்கோளிருந்து, புறப்பாடல்களின் சிந்தனை ஏன் உலகாயதமாகவோ, முன்னிலை உலகாய தமாகவோ வாழக்கையார்வம் கொண்ட கொள்கையாகவோ இருக்கிற தென்பதை நாம் புரிந்து கொள்ளலாம், தொன்மைச் சமுதா யத்தில் கூட்டுழைப்பின் அடிப்படையில் தோன்றியது உலகா 303