பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதக் கண்ணுேட்டம். அக்கண்னேட்டத்தின் சமுதாயப் பொருளாதார அடிப்படைகள் (Socio economic base) தகர்த்து போய் ஒரு புதிய சமுதாயப் பொருளாதார அடிப் படை தோன்றிய பின்னரும், அக்கருத்துக்கள் சமுதாயச் சிந்தனையை விட்டு முற்றிலும் நீங்கவில்லை. . ஆன்மீக வாதம் அல்லது கருத்துமுதல் வாதத்தின் தோற்றம்: முன்னர் எழுப்பிய வினவின் முதல் பகுதிக்கு இப் பொழுது விடை காண்போம். எங்கல்ஸ் எழுதிஞர் "இணக்குழுக்களிலிருந்து நாடுகளும் அரசுகளும் தோன்றின. சட்டமும் அரசியலும் தோன்றின. இவற்ருேடு மனிதர் மனத்தில் மனிதரைப் பற்றிய விகாரமான பிரதி பவிப்பு (Fantastic reflection) தோன்றியது. இதுதான் சமயம் என்பது. மாறிய சமுதாய அமைப்பில் மனித மனத்தின் இப் படைப்புகள் மனித சமுதாயத்தை ஆட்டிப்படைப்பதாகத் தோன்றின. அதே சமயம் கையில்ை (உழைப்பினல்) படைக்கப்பட்டவை மனித மனத்தில் மதிப்பை இழந்தன. ஏனெனில் உழைப்பைத் திட்டமிடும் மனம், உழைப்பை நிறைவேற்றும் கையையும் உறுப்பைகளையும் விட உயர்ந்த தாக எண்ணப்பட்டது. வர்க்க சமுதாயத்தில் மூளையால் உழைப்பவர்கள் தங்களது வேலைகளைத் தங்கள் கைகளால் அல்லாமல் பிறர் கைகளால் செய்து கொள்ள முடிந்தது. தமக்காக அல்லது பிறர்க்காக உழைக்கக் கைகள் இருந்தன. பழைய சமுதாயத்தில் தம் கைகளால் தமக்கே உழைத்துக் கொண்ட நிலைமையே இருந்தது. புதிய நாகரிகத்தின் முன் னேற்றத்திற்குக் காரணம் மனம்’ என்றே புதிய சமுதாயத் தின் அறிவாளிகள் கருதினர். உழைப்பிற்குப் பழைய சமு தாயத்தில் இருந்த சிறப்பு மக்கள் மனத்தில் இல்லாது ஒழிந் தது. தங்களது தேவைகளிலிருந்து அல்லாமல், தங்களது 29.3