பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகளிலிருந்து தங்கள் செயல்களுக்கு விளக்கம் காணத் தொடங்கினர். தொன்மைச் சமுதாயம் அழிந்தபின்னர் சிந்தனைகளிலிருந்து செயல்களை விளக்கும் ஆன்மீக வாத, கருத்து முதல் வாதக் கண்ணுேட்டம் வ லு ப் .ெ ப ற் து. மனிதன் மனத்தை இதுவே ஆக்கிரமித்தது”. 'உழைப்புப் பிரிவினை என்பது அவ்வாறு உண்மை யாகவே தோன்றியது, மன உழைப்பு, செயல் உழைப்பு என்ற பிரிவினை தோன்றிய பின்னர்தான். உண்மையான தொன்றை நினைக்காமலே தான் நிலைகொண்டிருத்தல் இயலும் என்று நிலை உணர்வு அல்லது பிரக்ளுைக்கு ஏற்பட்டது. உலகிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு. பிரக்ஞை அல்லது உணர்வு சுத்தமான கொள்கை, சமயம் தத்துவம், நீதி முதலியவற்றைப் படைக்கத் தொடங்கியது.” நமது ஆய்வுத் திட்டம் : மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய இருவரது மேற்குறிப்பிட்ட கருத்துரைகளை உரை கல்லாகக் கொண்டு கீழ்வரும் பொருள் களை ஆராய்வோம். (1) வாழ்க்கையார்வம் அல்லது உடன்பாட்டை வலி யுறுத்தும் முன்னிலை உலகாயதம், (2) பஞ்சபூதக் கொள்கை யினடிப்படையில் பிரபஞ்ச உற்பத்தியை விளக்கும் கருத்துகள். (3) பழந்தமிழர்களின் தத்துவத்தினடிப்படை யில் தோன்றிய நீதிக்கொள்கையின் சில அம்சங்கள். (4) உலகாயதக் கொள்கை, அதன் அறிதல் முறைக் கொள்கை இவைபற்றி உலகாயதர்களும், பூதவாதிகளும் கூறுவனவாக பெளத்த, சமண நூல்கள் கூறும் கருத்துக்கள். இலட்சிய வாழ்க்கையைப்பற்றிய கருத்து : பேரெயில் முறுவலார் என்னும் புலவர் நம்பி நெடுஞ்செழியன் என்ற தமது நண்பனை மன்னன் இறந்த பொழுது கையறுநிலைச் செய்யுள் ஒன்றைப் பாடினர்." 263