பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் இரகசியம்

  • இளமை மாருமல் இருத்தல் வேண்டும், மகிழ்ச்சியாக வாழவேண்டும்” என்ற ஆர்வம் எல்லாப் பூர்வீக மக்களுக்கும் பொதுவானது. எலிக்ளிபீர் ஆப் லைப் (Elixit of life) அம்ருத தாரை முதலிய கற்பனைச்சாகா மருந்துகளைத் தேடி அலேய அவர்களுக்கு இந்த ஆர்வமே ஊக்கம் ஊட்டியது. சித்தர் களும், தாந்திரிகவாதிகளும் தங்களது கபாலத்தில் அதனேக் கண்டுக் கொண்டதாகக் கற்பனை செய்து கொண்டார்கள். யோகத்தின் மூலம் கபாலத்திலுள்ள அமிருதத்தை இளகச் செய்து, சொட்டுச் சொட்டாக வடியச் செய்தால் மரணமின்றி வாழலாம் என்று சித்தர்களும், தாந்திரிகர்களும் நம்பினர்கள். இதற்கு எதிரிடையாக புறவாழ்க்கையே இன் பத்திற்கு அடிப்படை என்ற கருத்துக் கொண்ட புறப் பாடல் ஒன்றிருக்கிறது . அது பிசிராந்தையார் எழுதியது. அவருடைய நண்பன் கோப்பெருஞ்சோழனது வினவிற்கு விடையாகக் கூறியது அப்பாடல். வயதுமுதிர்ந்தவராய் இருந்தும் த ைநரைக்காமலிருந்தது ஏன் என்று சோழன் புலவரைக் கேட்டான். இதற்குப் பதிலாகப் புலவர், தமது மனேவியும், மக்களும் அறிவுடைவர்களாய் இருந்தமையும் அவரது இளையவர்கள் அவர் மனம் போல நடந்தமையும், அரசன் பிறரால் தீங்குவராமல் காத்தமையும், அவர் ஊரில் நல்லவர்கள் பலர் வாழ்த்தமையுமே தமது தலை நரைக்கா மலிருக்கக் காரணங்கள் என்று கூறுகிருர்,

யாண்டு பலவாக நரையில ஆகுதல் யங்காகியர் என வினவுதி ராயின் மாண்ட என் மனைவியொடு என் மக்களும் நிரம்பினர், யான் கண்டனையார் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்ருேம் பலர்யான் வாழும் ஊரே. இக்காரணங்கள் புற வயமான காரணங்கள், உலகாயதர் கண்ணுேட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைகள் 器伊荔