பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவை. தந்திரயோக முயற்சிகளோ, உள்மனத்தைத் தோண்டுவதோ, அம் ருததாரையை இளக வைப்பதோ இன்பத்திற்குக் காரணங்களல்ல. உலகியல் வாழ்க்கையனு பவங்களே இன் பத்திற்குக் காரணம். ξ, இனித் தம்மை ஆதரித்தவர்களிடத்துப் பிறரை அனுப்பும்போது பாடப்படும் ஆற்றுப் படைப் பாடல் களிலும் வாழ்க்கையுடன்பாட்டுக் கருத்தும் உலகாயதக் கருத்தும் காணப்படுகின்றன. புலவர் ஒரு புரவலனே யடைந்து பாடிப் பரிசில் பெற்றுத் திரும்புகிருன், அவனைச் சந்திக்கும் ஒரு புலவர் அல்லது பாணனிடம் தான் பரிசில் பெற்றுவரும் புலவனைப் புகழ்ந்தும், வாழ்த்தியும் கூறுவான். பிற்காலப் புலவர்கள், புரவலர்களே வாழ்த்தும்பொழுது தெய்வங்கள் அவர்கள் மீது அருள் பொழிய வேண்டுமென்று. வேண்டிக் கொள்வார்கள். ஆனல் ஆற்றுப் படைகள் எழுதிய புலவர்கள் கடவுளர் துணையை நாடுவதில்லை. தாமே நன்றியுணர்வுடன் வாழ்த்துவார்கள். சில புலவர்களின் வாழ்த்துப் பாடல்களின் கருத்துக்களை இங்கே குறிப்பிடுவோம். 'குடுமி வாழ்க, புலவர்களுக்குப் பொன்னும் நீரும் வழங்கும் குடுமி வாழ்க.. கடல் விழாக் கொண்டாடும் குடுமி வாழ்க. பஃறுளி ஆற்றின் மணல் போல அவன் வாழ்நாள்கள் அதிகமாகுக. 12 முதுகுடுமிப் பெருவழுதியை நெடுமாறன் பாடிய பாட்டின் கருத்தாவது ; 'கடற்கரை மணலைப்போல உனது ஆயுள் நாள்கள் மிகுவதாக. 13 மருதன் இளநாகனர் என்னும் புலவர் நன்மாறன் என்னும் பாண்டிய மன்னனை வாழ்த்திப் பாடிய பாடலின் கருத்து : 'நுரை மீதேறப் பெற்ற அலை பொங்கும் கடலின் மணல்போல உன் ஆண்டுகள் மிகுவதாக.”*

  1. ộệ