பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேருெரு வாழ்த்து : பாணர்களுக்குப் பொன் ஆபரணங்களே அணிவிப்பான், யவனர் கொணர்ந்த மதுவைப் பொற்கலசங்களில் அழகிய இளநங்கையர் அளிக்கப் பருகுவான். இத்தகைய மகிழ்ச்சியான வாழ்க்கையில் நீ பல்லாண்டுகள் வாழ்வாயாக..." மேற்கூறிய சான்றுகளிலிருந்து புறம் பாடிய புலவர்கள் (1) இம்மை வாழ்க்கை அல்லது இவ்வுலக வாழ்க்கையில் தான் ஆர்வம் கொண்டிருந்தார்கள். (2) இவ்வுலக வாழ்க்கையை உண்மையென்று கருதினர்கள், (3) இன் பத்தை இவ்வுலக வாழ்க்கையிலேயே பெறலாம். (4) ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக நீதிக்குட்பட்டு இவ்வுலகி லேயே இன்பத்தைத் தேடிப் பெறலாம் என்ற கருத்துக்களே ஆற்றுப் படைப் பாடல்களில் காணலாம். (5) இனக்குழு உலகக் கண்ளுேட்டத்தின் எச்சமாக முன்னிலை உலகாயதக் கருத்துக்களைப் புறப் பாடல்களில் காணலாம். உண்மையாக, உலகாயதக் கண்ணுேட்டத்தின் ஆரம்பம் பஞ்சபூதக் கொள்கை என்னும் சிந்தன் ஓர் இனத்தாரிடம் தோன்றிய காலத்தில்தான் என்று கூறலாம். புறப் பாடல்களில் நீர், நிலம், வளி, ஆகாயம், என்ற நான்கு பூதங்களாலோ அல்லது தீயும் சேர்ந்து ஐந்து பூதங் களாலோ பிரபஞ்சம் ஆக்கப்பட்டது என்ற சிந்தனையைக் காணலாம். ஒரு பாடலில் ஐந்து பூதங்களின் பெயர்களும் அவற்றின் தன்மைகளும் கூறப்பட்டுள்ளன. பூமிக்குத்திடத் தன்மையும், வானத்திற்கு பூமிக்கு மேலாகக் கவிந்து நிற்கும் தன்மையும், வானத்தில் இயங்கும் தன்மை காற்றிற்கும், தீயினுக்கு முரளுன தன்மை நீருக்கும் உண்டென்றும், ஒவ்வொரு பூதமும் தனித்தனி இயல்பு கொண்டுள்ளதென்றும் இப்பாடல் கூறுகிறது. - புறப் பாடல்களில் ஐந்து பூதங்களும் உலகின் தனிமங்கள் என்றும் ஒன்றிற்கொன்று முரண்பட்டவையாகவும், உற வுடைவாகவும் விவரிக்கப் பட்டுள்ளன. இப்பூதங்களுக்குத் 30.7