பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி இயல்புகளும், பண்புகளும் உள்ளன. லிண், விண் வெளித் தன்மையுடையது. பூமியின் மேல் உள்ளது. இவையிரண்டயும் ஏதோ ஒன்று பிரிக்கிறது. அதுவும் பூதத் தன்மையுடையதே. அதுதான் வளி (வாயு) அதன் உச்சியில் தீயிருக்கிறது. இவையிரண்டிற்கும் நெருக்கமான தொடர் புள்ளது. ஆயினும் அவை இருவேறு பூதங்களே. தீயும், நீரும் முரண்பட்ட இயல்புடையன. இவை யாவற்றையும் அவற்றின் இயல்புகளையும் கூறிய பின்னர், பூதங்களின் பொதுத் தன்மையை ஒரு பாடல் கூறுகிறது. ே மண் திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலேஇ தீயும் திமுரணிய நீரும் என்ருங்கு ஐம் பெரும் பூதத் தியற்கை போல. ஒவ்வொரு பூதத்திற்கும் தனித் தன்மையைச் சுட்டிக் காட்டியபின் பொதுத் தன்மையாக இயற்கை” என்ற கருத்தைப் புலவர் கூறுகிருர். இதுதான் சமஸ்கிருதத் தத்துவ நூலார் குறிப்பிடும் சுபாவம்’ ஆகும். இதை இயற்கைவாதம் அல்லது சுபாவவாதம் என்றழைக்கலாம். புராணக் கதைகளின் தோற்றம் இக்கொள்கைக்கு முரணு ைஇவ்வைந்தும் தாமே தோன்றி தமது சுபாவத்தால் இயங்குபவையல்ல என்றும் இவற்றை இறைவன் படைத்தான் என்றும், கருதும் கருத்து மூளை உழைப்பிற்கும், கை உழைப் பிற்கும் பிரிவினை ஏற்பட்டு வர்க்கங்களாக சமுதாயம் பிரிந்த காலத்திலேயே அறிவு, உழைப்பிலும் சிறந்தது என்ற கருத்துத் தோன்றியது. அதன் வளர்ச்சியாக உலகப் பொருள்களனைத்தையும் படைத்த சக்தி ஒன்று உண்டு, அது அறிவு மயமானது என்ற கருத்தும் தோன்றியது. இக்கொள்கை பூதவாதக் கொள்கையையும் இயற்கை வாதக் கொள்கையையும் 208