பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுக்கவே உருவாக்கப்பட்டது. இக்கொள்கைகளின் பிர பஞ்சத்தின் இயக்கத்திற்கும், பிரக்ஞையின் இயக்கத்திற்கும் ஒரு படைப்போன் தேவை. பிரக்ஞை அல்லது உணர்வைப் பற்றிய உலகாயதர் கொள்கையை தட்சிண் நாராயண சாஸ்திரி கீழ் வருமாறு: விளக்குகிரு.ர். பிரக்ஞை உடலின் ஒரு செயல். பொருளின் துகள்களில் உணர்வு இல்லை. இப்பொருட் துகள்கள் சிக்கலான ஆல்ை ஒழுங்கான முறையில் அமைக்கப் பட்டு ஐக்கியமாகும் பொழுது உயிர்ப் பண்புகள் அப்பொரு ளமைப்பில் தோன்றுகின்றன. உணர்வும் உயிரும் ஒன்றே. நமது சிந்தனைக்கு அது தோன்ற ஏதுவாயிருக்கும் சிந்தனைச் சக்தி மூலகங்களின் ஐக்கியம் சிதையும் பொழுது மறைந்து போகிறது. உடல் அழிகிறபோது உணர்வும் அழிந்து போகிறது. உடலில்லாமல் உணர்வை மட்டும் தனியாக அறிய முடியுமா ? உடல் அழிந்த பிறகு உணர்வு அல்லது உயிரும் அழிந்து போவதால் செத்தபிறகு அவ்வுடலிலிருந்து கூடு விட்டுக் கூடு பாய்வதற்கு எவ்வித சக்தியும் கிடையாது. சூரிய வெளிச்சத்தால் தாமரை இதழ்கள் விரிகின்றன, அதுயில்லாதபோது சுருங்குகின்றன. இதுபோலவே புறத் துர்ண்டுதல்களால் மனிதர்கள் இயங்குகின்றனர். அவர் களில் உடல் இயக்கம், உள்ள இயக்கம் இவையனைத்திற்கும் புறத் தூண்டுதல்களே காரணம். மனித வாழ்க்கையையோ, பிரபஞ்ச இயக்கத்தையோ துரண்டுவதற்கு ஒரு சிருஷ்டி கர்த்தா, இறைவன் அல்லது கடவுள் தேவையில்லை.” சொத்துரிமை, அரசு இவையிரண்டும் தோன்றிய காலத் தில் உழைக்கத் தேவையில்லாத ஒய்வுடைய வர்க்கம் தோன்றியது. அவர்கள் தாம் உழைக்காமலிருப்பதற்கு தங்களிடமிருக்கும் அறிவாற்றல், உழைப்பாற்றலே விடச் சிறந்ததென்றும், தங்கள் படைப்பு. உழைப்பின் படைப்பு களை விடச் சிறந்ததென்றும் நம்பி அவ்வாறே ஒரு கொள்கை யையும் உருவாக்கினர்கள். உழைப்பையே தங்கள் அறிவு தான் படைக்கிறதென்றும் கருதினர்கள். இந்தக் கருத்தின் 3{}9