பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படையில் தான் பிரபஞ்சச் செயல்களனத்திற்கும் ஒரு படைப்பாளி தேவையெனக் கருதி, தங்கள் கருத்திலிருந்து இறைவனைப் படைத்தார்கள். ஐம்பூதக் கொள்கையும் சுபாவ-வாதக் கொள்கையும் கடவுட் கொள்கைக்கு முன் பிருந்தனவென்பதை, மிகப் பழமையான கடவுள் பற்றிய புறப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஐம்பூதங்களைப் படைத் தவனுக சிவனே குறிப்பிடும் பாடல் ஒன்றுளது. 17 அவர் பிரபஞ்சத்தையும், மனிதர்களையும், உயிரினங்களையும் படைத்தவரல்லர் (பைபிளில் வருணிக்கப்பட்டிருக்கும் தேவனேப் போல). இதற்கு முன்னலிருந்த உலகக் கண்ணுேட்டமான ஐம்பூதக் கொள்கையையும், இயற்கை வாதக் கொள்கையையும் ஒப்புக் கொண்டு, ஐம்பூதங் களுடைய தலைக்குமேல் ஒரு படைப்பாளியை வைத்து விடுகிறது இக் கொள்கை. இக் கொள்கையைக் கூறும் பாடலின் கருத்து வருமாறு. 'மழுவைக் கையிலேந்திய கடவுள், புவி, ஒளி, விண், நீர் ஆகிய பூதங்கக்ாப் படைத்தான். ஒளி நிறைந்த மேனியும் இமையாத கண்களும் உடைய தேவர்களுக்கு அவன் தலைவன். வாடாத மாலைகளே தேவர்கள் அணிகிருர்கள். மணம் மிகுந்த உணவை அவர்கள் உட்கொள்ளுகிருர்கள்.” இக்கடவுள் சிவன். கையில் மழுவேந்தியவர். மனித வடிவில் கற்பனை செய்யப்பட்ட கருத்து இது. (Anthropomorphic conception) இவர் தேவர்களின் தலைவர் என்று இப் பாடலில் புலவர் கருதுகிருர், தேவர்கள் ஒளிமிக்க உடல் களும், இமையாத கண்களும் உடையவர்களாக வருணிக்கப் பட்டிருக்கிருர்கள். தேவர்களாயினும் அவர்களுக்கும் உணவு தேவையாகத் தானிருக்கிறது. அவர்க்ள் மணம் மிகுந்த உணவை உட்கொள்ளுகிருர்கள். இக்கருத்து இனக்குழு வாழ்க்கையில் உருவானது. ஒர் இனக் குழுவை, வேருேர் உலகத்தில் கொண்டு போய் வைத்தது போலிருக்கிறது இக் காட்சி. இனக்குழு வாழ்க்கையின் அடிப்படைகளிலிருந்து முற்றிலும் பிரிந்து விடாத நிலையில் தான் கருத்து மாறுதலும் 2 : 6