பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று வருணிக்கப்படுகிருன் சந்தோக்ய உபநிஷதத்தில் சனத் குமாரன், நாரதரிடம் சண்முகன் கதையைச் சொல்லும் பொழுது, ஸ்கந்தனும் சண்முகனும் ஒன்று என்று கூறுகிருர். இவ்விரண்டு நூல்களும் புத்தர் காலத்துக்கு முந்தியவை. ஆசியர் காலத்திற்கு முன் ஹாரப்பா, மோகன்ஜதாரோ மக்களின் புதைபொருள் எச்சங்கள் திரிசூலத்தையும், கோழியையும் காட்டுகின்றன. ஆதிச்சநல்லூர், பாலஸ்தீனப் பண்பாடுகள் சாயல் இதிலும் காணப்படுகிறது. ஆரியர் வருவதற்குமுன் இந்தியாவில் இருந்ததெல்லாம் தமிழ் நாகரிகம் என்று கூறுவோர் உளர். ஆயினும் இடைப்பட்ட ஆயிரக்கணக்கான மைல்கள், மூவாயிரம் ஆண்டுகள் இவற்றை இணைக்கப் பாலங்கள் போன்ற இணைப்புச் சான்றுகன் தேவை. இவையின்றியே அறிவியல் பூர்வமாக ஒன்றே மற்ருென்று. காலமும் தூரமும் என்செய்யும்’ என்று கருதி அவசர முடிவுக்கு விஞ்ஞானப் பாதையை மேற் கொண்ட எந்த ஆராய்ச்சியாளனும் வரமாட்டான். ஆரிய முற்கால மக்கள், ஆரியர் வருகைக்குப் பின் தோற்று தெற்கு நோக்கி வந்தனர் என்று சிலர் கூறுகிருர்கள். இக்கூத்தை ஆராய்ந்த திரு ஐஸ்க், மோஹன்ஜதரோ, ஹாரப்பா மக்கள் காலமுதல் அத்தலங்களில் கிடைக்கும் சிவப்பு கருப்பு மண்பாண்டங்கள், டெக்கான்வரை கிடைக் கின்றன என்றும் அதற்குத் தெற்கே கிடைக்கவில்லையென்றும் கூறி, ஹாரப்பா, மோஹன்ஜதரோ நாகரிகத்தின் தொடர்ச்சி தமிழர் நாகரிகம் என்ற கூற்றிற்குச் சான்றுகள் இல்லை என்று காட்டியுள்ளார். ஆளுல் அவர்களுடைய பண்பாடு மேற்கே கங்கைச் சமவெளியிலும், தெற்கே டெக்கான்வரை பரவி ஆரிய நாகரிகத்தோடு இணைந்து போய்விட்டது என்று கருதச் சான்றுகள் உள்ளன என்று கூறுகிருர், எனவே வேத காலத்திற்குப்பின் காணப்படும் ஸ்கந்தன் கதைகள், ஆசியக் கடவுளரும். அதற்கு முந்திய பண்பாட்டில் இடம் பெற்ற கடவுளரும் இணைந்து கலந் 夏飘