பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரை குறையாக ஏற்படுகிறது. 'அது தான் ஐந்து பூதங் களப் படைத்த மழுவேந்திய தேவருலகில், மணம் மிக்க உணவை உண்டு வாமும். ஒளி நிறைந்த உடலும் இமையா நாட்டமும் உடைய கடவுள்.” மேற் கூறிய கருத்துக்களே மதுரைக் காஞ்சியில் காணலாம். உணவும் உயிரும் உணவுப் பிரச்சினையை நினைத்ததும், புறப் பாடல்களில் அதற்கும். ஐம்பூதங்களுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு பற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்கள் தோன்ருமலிரா. ஒரு புலவர் ஒரு மன்னனே நோக்கி உணவுற்பத்தியைப் பெருக்க யோசனை சொல்லுகிருர், உணவு இரண்டு பூதங்களின் சேர்க்கை என்றும், அவை நீரும் நிலமும் என்றும், இவ் விரண்டு பூதங்களும் சேர மனித முயற்சி உதவ முடியு மென்றும் அவர் கூறுகிருர். அவர் கூறும் கருத்துக்கள் வருமாறு : உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரி யீண்டு உடம்பும் உயிரும் படைத்தி சினுேரே, வித்தி வாளுேக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் ருயினும் நண்ணி யாரு இறைவன்ருட்குவாதே. உடல் என்பது உணவின் பிண்டம். உணவு என்பது நீரும் நிலமும். நீரும் நிலமும் சேரும் பொழுது உடலும் உயிரும் உண்டாகின்றன. வின்தத்தவுடன் வானத்தைப் பார்க்கும் பூமியையுடைய மன்னன் செல்வம் பெற்று வாழ மாட்டான். - உணவும் ஐம்பூதங்களும் புறப்பாடல் ஒன்றிலும் மணிமேகலையிலும் உடலை, உணவின் பிண்டம் என்றழைக்கப்பட்டிருக்கிறது மனித 21 i