பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலை உண வுதான் உருவாக்குகிறது எனற கருத்தைச் சங்க நூல்களில் பரக்கக் காணலாம். உணவு, நீரும் நிலமும் கூடி யதன் விளைவாகத் தோன்றியது. இவ்விரு பூதங்களின் கூடுகைக்கு வழிசெய்யுமாறு மன்னனுக்குப் புலவர் அறிவுரை கூறுகிருர் . பஞ்ச பூதங்களின் இயற்கையை அறிந்து கொண் டால் மனிதன் பஞ்ச பூதங்களேத் தனது தேவைக்கேற்றபடி பயன் படுத்தலாம். - இனக் குழுக்கள் முற்றிலும் அழிந்த பிறகு ஒரே சீரான சமுதாய அமைப்பு நிலை கொண்டு இயங்கியது. அதுதான் நிலவுடைமை முறை. நிலவுடைமை உற்பத்தி முறை தமிழ் நாடு முழுவதிலும், அதற்கப்பாலும், பரவியது. இச் சமுதாயத்தில் இரு வர்க்கங்களாயிருந்தன. ஒன்று நில உடமையாளர்கள். மற்ருென்று நிலத்தில் உழைக்கும் உழவர்கள். இவ்வுழவர்கள் முன்பு கூட்டுழைப்பில் ஈடுபட் டிருந்த இனக்கு ழு மக்களாவர். சொத்துரிமை தோன்றிய பின், அது பரவி, நிலம் தனிவுடைமையாகி, நிலமற்ற வர்கள், நிலமுடையவர்களிடத்து உழைத்து தங்கள் உழைப் பில் ஒரு பங்கை, நில உடைமையாளருக்கு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உழைப்பாளிகள் வறுமைவாய்ப்பட்டு பசியில் உழன்றனர். பழைய இனக்குழு வாழ்க்கையில், உழைத்து அறுவடை செய்து ஒவ்வொருவரும் ஒரு பங்கு பெற்றனர். இருந்தால் எல்லோரும் உண்டுகளித்தனர். இல்லாவிட்டால் எல்லோரும் பசியால் வாடினர். புதிய உற்பத்தி உறவுகளால் இனக்குழுவிலிருந்த பொதுமை உறவுகள் இல்லாமற் போய்விட்டன. மனிதனை மனிதன் சுரண்டும் சமுதாயம் நிலே பெற்றுவிட்டது. பழைய இனக் குழுவிலிருந்த உணர்ச்சிகள், சிந்தனைகளின் நினைவு முற்றிலும், மாறவில்.ே உழவர் பெருமக்களிடையே பிறந்து அவர் களோடு நெருங்கிய தொடர்புகொண்டு வாழ்ந்த புலவர்கள், தங்களுடைய மக்களின் நிலைமையைக் கண்டார்கள். அவர் களால் தமது மக்களின் நிலையை மாற்ற முடியவில்லை. ஆளுல் அவர்கள் நிலையைப் பார்த்து இரக்கம்கொள்ள முடிந்தது. முடிந்த அளவில் அவர்களுடைய துன்பத்தைக் 212