பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைக்க இப் புலவர்கள் முயன்ருர்கள். இதற்காக அவர்கள் வறுமையை வருணித்துப் பாடி, பிற மக்களின் இரக்கத்தைக் கோரினர்கள் மன்னர்களையும் செல்வர்களையும் பார்த்து. ஏழைகளுக்கு இரங்கி சமுதாயத்தில் எஞ்சிய செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். கொடுத்தவர்களுக்கு இவ்வுலகில் புகழும். மறு உலகில் இன்பமும் கிடைக்கும் என்று ஆசை காட்டிஞர்கள். பசித் துன்பம் ஏழைக்கும், செல்வனுக்கும் ஒரே தன்மையானது தான் என்று கூறிஞர்கள். இத் துன்பம் எல்லோரையும் சமம் ஆக்கிவிடுகிறதென்று கூறிஞர்கள். நிலவுடைமைச் சமுதாயத்தில் சமத்துவம் இருக்கவில்லை. ஆயினும் புலவர்கள் செவிவழிச் செய்திகள் மூலம் பழங்கால இனக்குழுச் சமுதாயத்தின் கூட்டு உழைப்பு உற்பத்தி முறை பற்றியும், பொது உற்பத்தியால் கிடைத்த தானியத்தைச் சமமாகப் பங்கு வைத்துக்கொண்டது பற்றியும் அறிந்திருந் தார்கள். இதனை 'முந்தையோர் மரபு' என்றும் கொடை வள்ளல்கள் வாழ்ந்த காலமென்றும் கருதினர்கள். புதிய சமூகமுறையில் உழைப்பவனுக்கு வயிற்றுக்குப் போதுமான உணவுகூடக் கிடைக்கவில்லை செல்வர்களுக்கோ மேலும் மேலும் செல்வம் குவிந்தது. இந்த அநீதி புலவர்களின் மனச் சாட்சியை உறுத்தியது. மேன்மையான காலம் என்று அவர்கள் கருதிய பொற் காலத்தை அவர்களால் உயிர்ப் பிக்க முடியவில்லை. புலவர்கள் காலத்திலிருந்த சமுதா யத்தில் எல்லோரும் சமுதாய உற்பத்தியில் சமமான பங்கு பெறக்கூடிய விதத்தில் வாழ்க்கை முறைமையை மாற்ற முடியும் என்று அவர்கள் நம்பவில்லை. எனவே செல்வர் களைப் பார்த்து ' ஏழைகளுக்குக் கொடுங்கள், செல்வத் தைப் பயனின்றிச் சேர்த்து வைக்காதீர்கள்." "செல்வத்துப் பயனே ஈதல், ஆல்ை இவ்வறவுரைகள் செல்வர்களின் காதில் விழவில்லை. த.த.-14 然星@