பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய இனக்குழு வாழ்க்கையும் புதிய நிலவுடைமை வாழ்க்கையும் ஏழைகளுக்குத் தம்மிடம் உள்ள பொருளே மறைக்காமல் கொடுக்கும் செல்வர்களே புகழோடு வாழ்வார்களென்றும், அவ்வாறு கொடாதவர்கள் முன்னேர்களது மரபை அறியாத வர்கள் என்றும் ஒது புலவர் கூறுகிருர். இம் முன்ஞேர் யார்? இவர்களது நினைவு இப் புதிய சமுதாயத்தில் அகலவில்லை. பாரி, காரி, ஓரி, ஆய் போன்ற இனக் குழுத் தலைவர்களையே நிலவுடைமை மன்னர்களின் முன்னேர்க ளெனப் புலவர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களை இவர்கள் காலத்துப் புலவர்கள் எளிதில் கண்டு பரிசில் பெற முடியும். எனவே இவர்கள் புலவர்களால் வள்ளல்கள் எனப்புகழப்பட்டார்கள். இவர்கள் செல்வர்களாயினும், திலவுடைமை அடைந்து, மக்களிடமிருந்து தனித்துப்போய் வாழ்ந்தவர்களல்லர். நிலவுடைமையாளர்கள் தனித்து வாழ்ந்த காலத்தில், முன்னேர் நினைவுகள் இச்சமுதாயத்தில் பொற்கால நினைவுகளாகத் தோன்றின. தங்கள் கால வாழ்க்கையை விட முற்கால வாழ்க்கை சிறந்ததாகத் தெரிகிறது. முற்காலத் தலைவர்கள் கொடை வள்ளல் களாகத் தோன்றினர். முற்காலத்தவர்கள் ஒருவருக் கொருவர் அன்புடையவர்களாகவும், ஒருவர் நோக ஒருவர் பாராதவராகவும், பரஸ்பரம் உதவி வாழ்ந்தவர்களாகவும், ஒருவருக்கொருவர் சமமாக இருந்தவர்களாகவும், ஒருவருக் கொருவர் அடிமைப்பட்டு வாழாதவர்களாகவும் பிற்காலத் தவருக்குத் தோன்றிஞர்கள். ஏழ்மையும், செல்வமும் முரண்பட்டுக் காணப்பட்ட தங்களது உண்மை வாழ்க்கை நிலையிலிருந்து முற்கால இனக்குழு நினைவுகளைப்பற்றி எண்ணியபொழுது, அவை நிலவுடைமைக்காலப் புலவர்களுக்குப் பொற்காலமாகவே தோன்றியது. இந்த 'முந்தையோர் மரபு’ எது என்பது இப்புலவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் அந்த மரபு 3 #4