பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்துபோய்ச் சில நூற்ருண்டுகளாகிவிட்டன. அந்த மரபு இப்பொழுது நினைவெச்சமாகத்தான் இருந்தது. அந்த மரபு கூட்டுழைப்பு, கூட்டுணவு, முதலிய இனக்குழுக் கூட்டு வாழ்க்கையையே குறிப்பிடுகிறது. என்பதில் ஐயமில்லை. அக்கால இனக்குழுத் தலைவர்கள், புலவர்களையும் பாணர் களேயும் சந்தித்து உறவாடினர்கள். தாராளமாக இனக் குழுச் செல்வத்திலிருந்து பரிசில் கொடுத்தார்கள். அவர் களேப்போற்றி அவர்கள் காலத்து புலவர்கள் பாடியதி விருந்து பல நூற்ருண்டுகளுக்குப் பின் வாழ்ந்த புலவர்கள் அவர்களேப்பற்றித் தெரிந்துகொண்டு, அ வ ர் க ள து நினைவைப் போற்றிப் பாடிஞர்கள். இதுதான் 'முந்தை யோர் மரபு' பற்றிய உண்மை. செல்வத்தைச் சேர்த்துக் கொண்டு, வறியவர்களுக்குக் கொடாமல் இருக்கும் செல்வர்களைப் பார்த்துப் புலவர்கள், புகழ் வேண்டுமானல் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிரு.ர்கள். இவ்வுலகிலே கொடுப்பவர்களுக்கு வெகுமதியுண்டு. கொடாதவர்கள் நரகத்துக்குப் போவார் களென்று சங்கப் புலவர்கள் அச்சுறுத்துவதில்லை; இவர்க ளுடைய கண்ணுேட்டம் உலகாயதக் கண்ணுேட்டம். வைதீக, பெளத்த சமணப் பண்பாட்டுக் கலப்பு நிலவுடைமை வளருகிறபோது, ஆன்மீகக் கண்ணுேட்டம் வளர்ந்தது. உலகாயதக் கண்ணுேட்டம் தேய்ந்து வந்தது. இந்நிலையில், வட இந்தியாவிலிருந்து வேதவாதிகளும் பெளத்த பிக்குகளும், சமண முனிவர்களும் தமிழ் நாட்டுக்குத் தமது தத்துவங்களைக் கொணர்ந்தனர். இங்கு ஆன்மீக வாதத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமான தத்துவச் சூழ்நிலை இருந்ததால், உடைமை வர்க்கம் பல்வேறு வகையான கருத்து முதல்வாதத் தத்துவங்களுக்கு ஆதர வளித்தன. இது கிறித்தவ சகாப்தத்தின் ஆரம்பத்திலேயே நிகழ்ந்தது. மீமாம்ச யக்குைக் கிரியைகளும், உபநிஷத ஆன்மீக வாதக் கருத்துக்களும் தமிழ் நாட்டில் பரவின. அதே காலத்தில் அல்லது சற்றுப் பின்பாக பெளத்த சமண 215