பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயங்கள் பரவின, இராமாயண பாரதக் கதைகள், வாய்மொழி இலக்கியங்களாகப் பரவின. இக்காப்பியங்களே கி. மு. முதல் நூற்ருண்டு முதலே தமிழ் மக்கள் அறிந்திருந் தார்கள் என்பதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. பண்பாட்டுக் கலப்பு இவ்வாறு தொடங்கிப் பரவியது. பண்பாட்டுக் கலப்புக்கு உகந்த பக்குவகில வைதீக, பெளத்த, சமணக்கருத்துக்கள் வட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூக மாறுதல் கட்டத்தில் தோன்றியவை. இக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சமூகச் சூழ்நிலை அக்கருத்துக்கள் இங்குக் கொணரப்பட்ட பொழுது இருந்தது. எனவே அவை ஏற்றுக் கொள்ளப் பட்டன. இனக்குழு வாழ்க்கை அழிந்தபின் அந்த வாழ்க்கை முறையிலிருந்த கூட்டுவாழ்க்கைக்குப் பதிலாகத் தங்க ளுடைய சமயச் சங்கங்களே அமைத்துக்கொண்டு, இதனையே வாழ்க்கையின்பத்திற்கு வழியாகக் காட்டின. கூட்டு வாழ்க்கை அழிந்துவிட்ட பிறகு தென்னிந்திய மக்களும் தங்களை இணைத்துக் கொள்ள ஒரு பந்தத்தை நாடினர். பெளத்த சங்கமும் சமண சங்கமும் இத்தகையதொரு பந்தத்தை அளிப்பதாக தோற்றமளித்தன. எனவே இச் சமயங்கள் தமிழ் மக்களைக் கவர்ந்தன. சமண, பெளத்த துறவிகள் தமிழ் மொழியைக் கற்று, மொழி இலக்கண நூல் களையும், நீதி நூல்களையும் இயற்றித் தமிழ் கற்றவர்களி டையே செல்வாக்குப் பெற்ருர்கள். தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அதன் ஆசிரியர் இளங்கோவடிகள் சமணர், இரண்டாவது காப்பியம் மணிமேகலை. அதன் ஆசிரியர் சாத்தனர், பெளத்தர், முதல்வர் துறவி. இரண்டாமவர் இல்லறத்தார். முதல் காப்பியம் தத்துவநூல் அன்று. கோவலன் என்ற வணிகனையும் அவனது மனைவியையும் பற்றிய கதைதான். இந்நூலில் தத்துவ வாதங்கள் அதிகமில்லை. ஆனல் 3 l 6