பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை, கோவலனுக்கு அவனது காதற் கிழத்தி மாதவி மூலம் பிறந்த மணிமேகலை துறவுபூண்ட கதையைச் சொல்லுகிறதாலுைம், மணிமேகலை நூல் தோன்றிய காலத்திருந்த பல தத்துவங்களைக் பற்றியும் கூறுகிறது. இந்த வாதங்களைச் சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில் படிக்கிருேம். இந்த வாதங்களை அவ்வச்சமய வாசிரியர்கள் கூற மணிமேகல் கேட்பதாகக் கதை கூறுகிறது. அவளுக்குக் கூறப்படும் தத்துவங்களாவன : 1. அளவை வாதம் 2. சைவம் 3. பிரம்மவாதம் 4. வைணவம் 5. வேதவாதம் 8. ஆஜீவகம் 7. நிர்ச் கந்தம் (சமணத்தில் ஒரு பிரிவு) 8. பூதவாதம் (உலகா பதம்) 21 இந்நூலில் பூதவாதி தனது தத்துவத்தை எப்படி விளக்குகிருர் என்று காண்போம். "பூதவாதியைப் புகல் நீ என்னத் தாதகிப் பூவும் கட்டியும் இட்டு மற்றுங் கூட்டத்து மதுக்களி பிறந்தாங்கு உற்றிடு பூதத்துணர்வு தோன்றிடும்: அவ்வுணர்வு அவ்வப்பூத அழிவுகளின் வெவ்வேறுபிரியும் பறையோசையில் கெடும். உயிரொடுங்கூட்டிய உணர்வுடைப் பூதமும் அவ்வப்பூத வழியவை பிறக்கும் மெய்வகை இதுவே, வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே கண் கூடல்லது கருத்தளவழியும் இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே பொய்மை மறுமை யுண்டாய்வினை துய்த்தல்” "தாதகிப் பூவையும் கருப்புக்கட்டியையும் சேர்த்துக் கொதிக்க வைத்தால் மதுச்சாரம் உண்டாகிறது. அது 著五*