பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலவே ஐம்பூதங்களின் சேர்க்கையால் உணர்வு தோன்று கிறது. ஒலி காற்ருேடு கலந்து போவதுபோல பூதங்கள் சிதைகிறபொழுது உணர்வும் மறைந்து போகிறது. பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிருள்ள பூதங்கள் தோன்றி, அவற்றிலிருந்தே உயிருள்ள பூதங்கள் தோன்றுகின்றன. உயிரற்ற பூதங்கள் ஒன்றிரண்டு சேர்ந்து அதேவிதமான உயிரற்ற பூதங்கள் தோன்றுகின்றன. உலகாயதம் அடிப் படையில் பூதவாதத்தை ஒத்திருக்கும் தத்துவமே. காட்சிப் பிரமாணத்தின் மூலமே அறிவு பெற முடியும். அனுமானப் பிரமாணம் போவித் தன்மையுடையது. உண்மையை அறிய அது சரியான பிராமணமாகாது. உலகம் உண்மை யானது. அதன் விகளவுகள் இவ்வுலகத்தில் தான் காணப் படும். வேருேள் உலகத்தில் இவ்வுலக வினைகளின் பயன் களைத் துய்ப்போம் என்பது பொய்யாகும்.” பூதவாத விளக்கத்தைக் கேட்ட பின்னர் மணிமேகலை அதனை மறுத்துரைக்கும் முறையில் சில கேள்விகள் கேட் கிருள். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒர் அதிசயச் செயலின் மூலம் அவள் தனது முற்கால வாழ்வின் நிகழ்ச்சிகளை அறிந் திருந்தாள். இது கதை. உரு வெளித் தோற்றங்களும், கனவு நிகழ்ச்சிகளும், தெய்வ நம்பிக்கையால் தோன்றும் மயக்கங்களும் பொய்யென்று பூதவாதி கூறுகிருன். அவற்றைப்பற்றி ஐயுறுதல் வேண்டும். பழைய உரையாசிரியர் இத்தத்துவத்தின் மூன்று விசேட வகைகளே வேறுபடுத்திக் கூறுகிரு.ர். 1) பூதவாதம் 2) உலகாயதம் 3) சாருவாதம் பூதவாதத்தின் உட்பிரிவுகள் பூதவாதிகள் ஐம்பூதங்களில் நம்பிக்கையுடையவர்கள் ஆளுல் சாருவாகர்களும், உலகாயதர்களும் நான்கு பூதங் களின் நம்பிக்கையுடையவர்கள். ஆகாயம் அல்லது விண் னினை அவர்கள் ஒரு பூதமாகக் கருதுவதில்லை. இதனை 器薰母