பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தட்சிண் நாராயண சாஸ்திரி கூறுகிருர், உணர்வு என்பது உணர்வற்ற பூதங்களின் கூட்டால் ஏற்படுகிறது என்பதிே உலகாயதர் கொள்கை. உயிருடைப் பூதம், உயிரில் பூதம் என்று மணிமேகலையில் பூதவாதி கூறுவது போன்று இரு வகைப் பூதங்கள் அவர்கள் கொள்கைப்படி இல்லே இவ்விரு வகைப் பூதக்கொள்கை, முரணற்ற பொருள் முதல்வாதிக் கொள்கைக்கு முரணுனது. ஏனெனில் உயிருடைப் பூதம் என்பது பூதங்களில்லாமல் வேருெரு சக்தியோடு இயைபு கொண்டு தோன்றுவதாக இருத்தல் வேண்டும். உயிர் என் பது என்னவென்பதை அக்கருத்துப்படி பூதங்களின் கூட்டால் தான் உலகிலுள்ள அனைத்தும் உண்டாகின்றன என்று விளக்குவது இயலாது. இவ்விரு வகைப் பூதங்கள் பற்றி உலகாயதர் கருத்துக்கள் யாவை என்று அறிவதற்குச் சான்றுகள் யாவை என்று அறிவதற்குச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லே. மணிமேகலைக் காவியத்தில் பூதவாதியின் தத்துவ விளக் கத்தைக் கேட்டபின்னர், அவனுடைய விவாதத்தை முறி யடிக்க மணிமேகலை சில வினுக்களை விடுத்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது. தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசய சம் பவம் ஒன்றின் மூலமாகத் தனது முற்பிறப்பைப்பற்றி அறிந்து கொண்டிருந்தாக மணிமேகலையின் கதை கூறும். தனது முற்பிறப்பு பற்றித் தனக்குத் தெரியுமென்று அவள் பூதவாதி யிடம் கூறுகிருள். இதற்குப் பதிலாகத் தெய்வங்களின் மீது நம்பிக்கை கொள்வதால் அத்தெய்வங்களே நேரில் கண்ட தாகக் கூறுவதும், உருவெளித் தோற்றங்களும், மாயைத் தோற்றங்களும், கனவுகளும் பிரக்ஞையற்ற நிலையும் ஆகிய அனைத்தும் நம்பத்தகாதவை என்று பூதவாதி கூறுகிருன். காட்சிப் பிரமாணம் (Direct perception) ஒன்றைகே தான் நம்புவதாகப் பூதவாதி கூறுவதாக வேண்டுமென்றே எண் னிக் கொண்டு, அவனிடம் அவள் ஒரு கேள்வி கேட்கிருள். "அனுமானத்தின் மூலம் அல்லாமல், உன்னுடைய பெற்ருேர்களே நீ எவ்வாறு அறிவாய்; நேரடிக் காட்சியால் மட்டும் அல்லாமல், அனுமானத்தின் மூலம் தாம் உண்மையை 219