பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிகிருேம். அனுமானத்தின் மூலம் நாம் அறியும் 4; 22 உண்மைகளே நம்ப மறுக்காதே’, பூர்வபட்ச பூதவாதம் மணிமேகலை ஒரு பெளத்த பிக்குணி, இக்காப்பிய ஆசிரியர் சாத்தளுரும் பெளத்தரே. எந்த வகையான உலகாயதாமாயினும் சரி, பெளத்தர்கள் அக்கருத்துகளின் எதிரிகள். . மறுப்பதற்கெனவே இக்காப்பியத்தில் பூதவாதியின் வாதம் கூறப்பட்டது. எளிதில் எதிர்க்கவும், முரண் பாடுகளேச் சுட்டிகாட்டவும் ஏற்றபடி பூதிவாதத்தை மணிமேகலையாசிரியர் திரித்துக் கூறியுள்ளார். நீலகேசியில் பூதவாதம் நீலகேசிக் காப்பியத்தில் பூதவாதியின் பெயர் பிசாசகன். அவன் நோய்வாய்ப்பட்டவனைப்போல காணப்படுகிருளும். ஏனெனில் கட்டுப்பாடில்லாமல் உலக போகங்களை அனுபவிப் பவன் பொருள் முதல்வாதி என்ற எண்ணத்தை மாற்ற தத்துவ வாதிகள் ஏற்படுத்த முயன்று வந்தனர். கிரேக்க தத்துவ வாதிகளில் பொருள் முதல்வாதியான எபிகியூரஸ் என்பவனேப் பற்றி இதேவிதமான எண்ணத்தை ஏற்படுத்தப் பிற்கால தத்துவ வாதிகள் முயன்றனர். இக்காப்பியமும் பூதவாதியை அறிமுகப்படுத்தும்போதே பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன்” என்று அவனைப் பற்றிக் கூறுகிறது. நீலகேசியில் கூறப்படும் பூதவாதம் பற்றி நேரிலேயே அறிந்து கொள்ளுவோம்." - அணிகொளாரத் தரசபை கேட்கெனப் பிணிகொள் மூஞ்சிப்பிசாசகன் சொல்லுவான் குணி, குணம் என்றும் கூற்றிலது அதென் துணிவைம் பூதங்களே, தொழில் சொல்லுகேன் 230