பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கக் கூடும். சண்முகன் வேத காலத்தில் பிரபலமர் யில்லாமலிருந்து பின்னர் புகழ் பெற்ற ஆரியக் கடவுளாக வாவது, அல்லது ஆரிய முற்காலப் பண்பாட்டுத் தேவர் களில் ஆரியப் பண்பாடோடு இணைந்து பிரபலமெய்திய தேவர்களுள் ஒருவளுகவாவது இருக்கலாம். வேதக் கடவுளரில் மிக முற்பட்ட காலத்தில் புகழ் பெற்றிருத்த தெய்வங்களான வருணன், மித்ரன், முதலியோர் புகழ் குன்றி, அக்னி, ருத்ரன், இந்திரன் புகழ் பெற்றமையை வேத இலக்கியங்களின் வரலாற்றில் காண்கிருேம். சமூக வாழ்க்கை மாறும்பொழுது, அதற்கேற்ப அகவயக் கருத்துக் களும் மாறுகின்றன. எனவே பிறபண்பாட்டுக் கலப்பால் தான் முன்பு புகழ் பெற்றிராத தெய்வம் பிற்காலத்தில் புகழ் பெற்றதாக ஆயிற்று என்று முடிவாகக் கூறுவதற்கில்லை. வடநாட்டுக் காப்பியங்களில் இராமாயணம், பாரதம் இரண்டும் ஸ்கந்தன் கதையைச் சொல்லுகின்றன. அவை கிறிஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்ருண்டுகளுக்கு முன் வாய் மொழியாக வழங்கி வந்தவற்றைத் தொகுத்தெழுதிய தொகைக் காப்பியங்களே. இராமாயணம் கூறும் ஸ்கந்தனைப் பற்றிக் கூறும் கதையைக் காண்போம். அசுரர்களோடு போராடி அவர் களை அழிக்க தேவர்களும் ரிஷிகளும் ஒரு சேபைதி வேண்டு மென்று ஆசைகொண்டு பிரம்மனிடம் போய் தனது படைக்கு ஒரு சேபைதியை அருள வேண்டிஞர்கள், பிரம்மன், அக்கினி தேவன் கங்கா தேவியோடு சேர்ந்து ஒரு வீரனை உருவாக்கித் தரமுடியுமென்று சொன்னன். உடனே தேவர்களும் ரிஷிகளும் அக்கினியிடம் சென்ருர்கள். மலை மகளான கங்கையினிடத்து ஒரு மகனைப் பெற்றுத் தரும்படி அக்கினியிடம் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அக்கினியைக் கண்டவுடன் கங்கை மிக அழகான தேவ மங்கையின் உருவமெடுத்தாள். உடனே அக்கினி அவள்மீது தனது விதையை மழைபோல பெய்தான். அதனைத் தாங்க மாட்டாமல் அவள் என்ன செய்வதென்று கேட்டாள். 19