பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்ணென் தீ நீல நீர்வாளி காயத்தாற். கண்ணு மூக்கொடு நா மெய் செவிகளாய் வண்ண நாற்றஞ் சுவையிருேறுே ஒலி, எண்ணுங் காலையியைந்துழி யெய்துமே ஐந்துங் கூடியறிவின்ப மாதியாய் வந்து தோன்றி மதுமலக் காற்றலின் அந்தி நூலும் குடஞ்சுடர் நாட்டம்போல் இந்தினுலவை சென்றினஞ் சேருமே. உலகெலாம் அவையே உயிருண்டெனச் சொலவலாரெனச் சொற்றெளிந்தே நின்று பல காலங்களும் செய்யப் பயனிலார் புலவராவதன்ருே அங்குப் போந்ததே. மணிமேகலையிலும், நீலகேசியிலும் கூறப்படும் பூதவாதக் கருத்துகளில் காணப்படும் வேறுபாட்டை மணிமேலே உரை யாசிரியர் குறிப்பிட்டு விளக்குகிருர், மணிமேலேயின் பூதவாதி உயிருள்ள பூதம் உயிரற்ற பூதம் என இருவகைப் பூதங்கள் உள்ளவென்று சொல்லுகிருன். உயிருள்ள பூதங் களிலிருந்து உயிருள்ளவையும், உயிரற்ற பூதங்களிலிருந்து உயிரற்றவையும் தோன்றுவதாக அவனே கூறுகிருன். உலகாயதர்கள் இவன் சொல்லுவதுபோல இரண்டுவகைப் பூதங்கள் உள்ளனவென்று ஒப்புக் கொள்ளுவதில்லை. மணிமேகலை பூதவாதியும் உவகாயதரும் பொருள் முதல் வாதத்தின் முக்கியக் கடைப்பிடிகளில் ஒன்றுபடுகின்றனர். மணிமேகலையின் பூதவாதி இத்தத்துவத்தில் சிற்சில வேறு பாடுகள் கொண்ட சிலவகைச் சித்தாந்தங்கள் உள்ளன வென்று கூறுகிருன். நீலகேசியில் பூதங்களே தம்முள் கூடி உணர்வு, மகிழ்ச்சி முதலிய பிரக்ஞைகளைத் தோற்று விப்பதாக ஆசிரியர் கூறுகிருர். பூதத்திரள்களில் உயிருள்ளவை, உயிரில்லாதவை என்ற பாகுபாட்டை நீலகேசி கூறவில்லை. 隸露荔