பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்கூறியவற்றிலிருந்து தொன்மையான உலகாயத பூதவாதக் கருத்துக்கள் முதலில் சில முதிர்ந்த சிந்தனைகளாத் தோன்றி பெளத்த, சமண தத்துவங்கள் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் தர்க்கரீதியான சிந்தனைமுறை ஆயின என்ற முடிவுக்கு வரலாம். பூதவாதத்தின் மீது, தத்துவ வாதிகள் தொடுத்த தாக்குதலுக்குப் பதிலளிக்கப் பூதவாதிகள் தங்களுடைய தத்துவத்தைத் தருக்க ரீதியான சிந்தனை முறையாக உருவாக்கினர்கள். ஆன்மீக வாதிகள் எழுப்பிய தத்துவ விளுக்களுக்குப் பூதவாத அடிப்படையில் விடையளிக்கத் தம்முடைய தத்துவத்தை அவர்கள் செம்மை பாக்கிக் கொண்டனர். உலகாயதத்தின் தோற்றுவாய்கள் வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகள் சில உள்ளன' அவற்றிற்கு எந்தத் தத்துவமும் விடையளிக்க வேண்டும். உயிர் என்ருல் என்ன ? உடலுக்கும் உயிருக்கும் என்ன தொடர்பு? இப்பிரபஞ்சத்தை மனிதன் எவ்வாறு அறிகிருன்? பிரக்ஞை என்ருல் என்ன? சாவுக்குப் பின் உயிரின் நிலை என்ன? இவ்வுலகில் புனர் ஜன்மம் உண்டா? வேருேர் உலகில் வாழ்க்கை உண்டா? இக் கேள்விகளுக்கு ஐம்பூதக் கொள்கை யடிப்படையில் உல காய தர்கள் விடையளித்தனரா? அவர்களே எழுதிய நூல்களெதுவும் பண்டைக் காலத்தி லிருந்து நமக்கு கிடைக்காததால், இக் கேள்விகளுக்கு அவர்கள் என்ன விடையணித்தனர் என்பதை நம்மால் அறிய முடியவில்லை. உலகாயதரின் பகைவர்களே அவர்களது கருத்துக்கள் இவையென்று பண்டைக்கால முதல் சொல்லி வந்திருக்கிருர்கள். அதுவே பூர்வ பட்சவாதம். உலகாயதர் களுடைய கருத்துக்களைப் ப ைக வ ர் க ள் திரியின்றிக் கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பகைவர்கள், உலகாயதர்களின் கருத்தை மறுக்க எளிதாயிருக்கும்படி அவர்களது கருத்தைத் திரித்துக் கூறுவது எளிது. பகைவர் களின் பூர்வபட்சக் கருத்துகளிலிருந்து உலகாயதத்தின் உருவத்தை முழுமையாக அறிவது கடினம் என்ற கருத்தை தேவிபிரசாத் பின்வருமாறு கூறுகிருர், 24 祭