பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உலகாயதத் தத்துவத்தை அறிய நாம் எந்தெந்த நூல்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டியதாய் உள்ளது: உலகாயதத்தை இழிவு படுத்தவும், மறுக்கவும் எண்ணியலர் క్షణాత్ర எழுத்துக்களிலிருந்து தான் உலகாயதத்தை அறிந்து கொள்ளும் நிலைமையில் இருக்கிருேம். பூர்வபட்ச அறிவாகத் தான் உலகாயதம் நமக்குக் கிடைக்கிறது. மற்தையத் இத்துவங்களுக்கு அவ்வத் தத்துவ வாதிகளே எழுதி வைத்துப் பாதுகாக்கப்படுவது போல, உலகாயத நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனுல் அத்தகைய நூல்கள் என்றுே இருந்ததில்லை என்பதல்ல பொருள். பண்டைக் காலத்திலும், கடுக்காலத்திலும் உலகாய தத்துவ நூல்கள் இருந்தன என்பதை பல சான்றுகள் கொண்டு, தாஸ்குப்தா, கார்வே, துக்சி போன்ற அறிஞர்கள் நிரூபணம் செய்துள்ளார்கள்.” மிகவும் தொன்மையானது என்று அவ்வச் சமயவாதிகள் தங்கள் தத்துவத்தையே குறிப்பிடுவார்கள். அவ்வச் சமய வாதிகளின் புராதன நூல்கள் உலகாயதத்தை மதுக்கின்றன. எனவே உலகாயதம் என்ற தத்துவம் பிற தத்துவங்களின் புராதன நூல்களைப் பார்க்கிலும் தொன்மையானது என்பது புலப்படும். பழைமையானதெனக் கருதப்படும் வேதவாதம், சாங்கியம், மீபாம்சம், நியாயம், வைகேஷிகம் முதலிய தத்துவங்களிலும் இது பழைமையானது, அப் பழமையான நூல்களிலிருந்து, தமிழ் இலக்கிய நூல்களிலிருந்தும், உலகாயதம் பற்றிக் கிடைக்கும் ஆதாரங்கள் பூர்வ பட்சமாயிருப்பினும் கூட மிக முக்கியமானவை. இந்தியப் பொருள் முதல் வாதத்தின் முக்கியக் கடைப்பிடிகன் எவை என்பதைப் பற்றி தொன்மையான தத்துவ நூல்கள் பூர்வ பட்சமாகக் கூறும் கருத்துக்கள் ஒன்று போலவே இருக் கின்றன. முக்கியமற்ற அம்சங்களில் தான் வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே அவை அடிப்படை அம்சங் களில் புராதன உலகாயத நூல்களின் கருத்துக்களேயே சுருக்கிப் பூர்வபட்சமாகக் கூறுகின்றன என்று நாம் கருதலாம். அந் நூல்களிலிருந்து உலகாயதத்தின் கடைப் பிடிகள் என நாம் அறிபவை வருமாறு: 魏器壽