பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தோன்மையான இந்திய உலகாயதர்கள் உலகம் உண்மையானதென்று நம்பினர். (அதாவது உலகம் மாயைத் தோற்றமல்ல, உண்மையானது.) 2 பொருள்களின் இயற்கை, செயல்கள் இவற்றினடிப் படையிலேயே வாழ்க்கை எழுகிறது. 3 உலக வாழ்க்கையின் பொருளாயத அடிப்படையில் ஐம்பூதங்கள் (நான்கு என்று கருதுவோரும் இருந்தனர்) 4 ஐம்பூதங்களின் பல்வேறு வகையான சேர்க்கையால் பிரபஞ்சத்தின் பல்வேறு பொருள்களும், உயிரினங்களும் உண்டாகின்றன: 5 உணர்வும் உயிரும் ஒன்றே. அது ஐம்பூதச் சேர்க்கையால் உண்டாவதே ஐம்பூதங்களின் ஒரு குறிப்பிட்ட விதமான சேர்க்கையால் உணர்வு என்ற குணம் பொருளில் தோன்று கிறது. 6. உண்மையைக் காட்சி பிரமாணத்தால் அறியலாம். (girt’.9— Direct Perception) 7 காட்சியும், காட்சியை அடிப்படையாகக் கொண்ட அனுமானமும் அறிவைப் பெறும் வாயில்கள் அல்லது இவையே அறிவின் ஊற்றுக்கண்கள் காட்சியின்றி, அனுமான மில்லை. அனுமானமின்றி அறிவு தோன்றுவதில்லை. ஏழாவது எண்ணுள்ள கருத்தைப் பற்றி தத்துவ உலகில் ஒரு விவாதம் நிகழ்ந்துள்ளது. பண்டைய உலகாயதர் களுடைய கருத்தில் அனுமானம் என்பது ஒர் அறிவுச் சாதனமா என்ற கேள்வி எழுகிறது. காட்சிப் பிரமாணம் ஒன்றுதான் அறிவுச் சாதனம் என்று அவர்கள் கருதினர் களா? இந்த விவாதத்தை விளங்கிக் கொள்ள முயலுவோம். மணிமேகலைக் காப்பியம் பல்வேறு தத்துவங்களின் கருத்துக்களை எதிர்த்துக் கூறி அவை ஒவ்வொன்றின் அறிதல் முறையையும் விளக்கிக் கூறுகிறது. இவையனைத்தையும் 器雾袭