பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. "உலகாயதம் பிரத்தியட் சத்தை மட்டும் ஒப்புக் கொள்கிறது. பெளத்த பிரத்தியட் சத்தையும் அனுமானத்தையும் ஒப்புக் கொள்கிறது. சாங்கியம் மேற்கண்ட இரண்டோடு ஆகமத்தையும் ஒப்புக் கொள்கிறது. வைசேஷிகம் மேற்கண்ட மூன்ருேடு உவமானத்தையும் ஒப்புக் கொள்கிறது. நியாயவாதிகள் மேற்கண்ட நான்கோடு அருத்தா பத்திகை ஒப்புக் கொள்கிருர்கள். மீமாம்சகர்கள் மேற்கண்ட ஐந்தோடு அபாவத்தையும் ஒப்புக் கொள்கிரு.ர்கள்.” இதிலிருந்து பண்டைய உலகாயதர்கள் காட்சிப் பிரமாணம் அல்லது பிரத்தியட்சத்தை மட்டும் அறிவு பெறும் முறையாகக் கருதிஞர்கள் என்பது மற்றைய தத்துவவாதிகளின் கருத்து என்பது புலனுகிறது. இக் கருத்து மணிமேகலையில் மீமாம்சகவாதியின் வாயிலாகக் கூறப்படுகிறது. மணிமேகலை உரைகாரர். இக் கருத்தோடு வரதராயர் போன்ற பிற்காலத் தருக்க ஆசிரியர்கள் ஒன்று படுவதாகக் கூறுகிருர், வரதராயரின் தருக்க ரட்சை என்ற நூலில் உலகாயதர் கருத்தில் அறிவு பெறும் வழி காட்சிப் பிரமாணம் ஒன்றே என்று கூறுகிருர். இதனை மணிமேகலை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிருர், பண்டை உலகாயதர்கள் காட்சிப் பிரமாணம் ஒன்றைத் தான் அறிவு பெறும் வழி என்று கருதிஞர்களா? அனுமானத்தை அறவே ஒதுக்கி விட்டார்களா? மே ற் கூ றி ய விவரங்களிலிருந்து உலகாயதத்தின் விரோதிகள் அவ்வாறு கருதினர்கள் என்று தெரிகிறது. ஆனல் பகைவர்களின் கூற்றிலிருந்தே பூதவாதிகளின் தத்துவத்தில் முடிவுகளுக்கு வர அவர்கள் காட்சி, அனுமானம் என்ற இரண்டு அறிதல் முறைகளையும் பயன் படுத்தினர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆளுல் அனுமானத்தை உடலின் வேருக ஆத்மா உள்ளது என்ற கூற்றை நிரூபிக்கவோ இம்மையிற் செய்த வினைகளின் பயன்களை அனுபவிக்க மறுமையுலகம் ஒன்று உண்டு. 225