பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை நிரூபிக்கவோ பயன்படுத்தலாகாது என்று உலகாயத வாதிகள் கூறிஞர்கள். இந்தப் பிரச்சினையைத் தட்சிண நாராயண சாஸ்திரி ஆராய்ந்துள்ளார். அவர் கூறுவதாவது: உலகாயதர்கள் அனுமானத்தை இருவகையாகப் பிரிக்கிருர்கள். ஒன்று வருங்காலத்தை குறித்த அனுமானம் மற்ருென்று இறந்த காலத்தைக் குறித்த அனுமானம். வருங்காலம் குறிந்த அனுமானம் தவருனது. அனுமானம் என்ற அறிதல் முறையின் எல்லேக்கு அப்பாற்பட்டது. இறந்த காலம் குறித்த அனுமானம் அறிதல் எல்லேக்குட்பட்டது. எனவே முதலாவது முறை தவமூனது. இரண்டாவது முறை சரியானது.” - இவ்வாறு தட்சிண நாராயண சாஸ் திரி சொல்வதை குப்தா விளக்கிக் கூறுகிருர். அவர் ஏழாவது நூற்ருண்டில் வாழ்ந்த புரந்தரர் என்னும் உலகாயத பாதியை மேற்கோள் காட்டுகிரு.ர். "புரத்தரன், உலகையறிய அனுமானமும் உபயோகமான அறிதல் முறையே. ஆனல் ஒவ்வொரு அனுமானத்திற்கும் காட்சியின் அடிப்படையான சான்று வேண்டும். அனுமானத் திற்கு அடிப்படையாகக் காட்சி அல்லது அனுபவம் இருத்தல் வேண்டும். மறும்ை உலகை திருபிக்கவோ சாவுக்குப் பின் வாழ்க்கை நீடிக்கிறது என்ற கொள்கையை நிரூபிக்கவோ, கர்மவிதிக் கொள்கையை நிரூபிக்கவோ அனுமானத்தைப் பயன்படுத்தாைகாது. ஏனெனில் இவை மூன்றும் காட்சிக் கும் அனுபவத்திற்கும் எட்டாதவை” என்று கூறுகிருர். இப்பொழுது தட்சிண நாராயண சாஸ்திரியின் கூற்று தெளிவாகிறது. அனுமான முறை பொருளடிப்படையிலான இம்மை வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். சாவுக்கு அப்பாலுள்ள வாழ்க்கை போன்ற இம்மை வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை தியாயப் படுத்த அனுமானத்தை பயன்படுத்தலாகாது தாஸ்குப்தா, 336