பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரந்தரர் கூறுவதாக மேற்கோள் காட்டும் பகுதி இதனை இன்னும் தெளிவாக்குகிறது. 'அனுமானத்தைப் பயன் படுத்துவதில் இரு வேறு உலகங்களைப் பிரித்தறிய வேண்டும். ஒன்று அனுபவத்திற்குட்பட்ட உலகம். மற்ருென்று அனுபவத்திற்கப்பாற்பட்ட உ. ல க ம். உலகாயதர்கள் அனுமானத்தை அனுபவ உலகத்திற்குப் பயன்படுத் திஞர்கள். அதற்கப்பாற்பட்ட உலகத்திற்கு பயன்படுத்த மறுத்தார்கள். கடவுள் இருக்கிருர்’ 'மறுபிறப்பு உண்டு மறு உலகம் உண்டு யக்ஞ வினேகனால் பயன் விளையும்.” நற்செயல்களால் சொர்க்கமும் தீaசெயல்களால் நகரமும் கிடைக்கும் இது போன்ற அனுமானங்கள் அனுபவ உலகத்திற்கு அப்பாற்பட்டவை. இதனை உலகாயதர்கள் மறுத்தார்கள். ஆனுல் உலகாயதத்தின் பகைவர்கள் அவர்கள்.அனுமானத்தையே மறுத்ததாகக் கூறி உலகாயதன் புகை கண்டவிடத்துத் தீயை ஒப்புக்கொள்ள மாட்டான் என்று கேலி செய்தார்கள். புகையும் தீயும் அனுபவ உலகத் தைச் சேர்ந்தவை. இதற்கு அனுமானத்தை அறிதல் முறை யாகப் பயன்படுத்துவகை உலகாயதர்கள் ஒப்புக்கொண் டார்கள். ஆளுல் ஆன்மீக வாதத் தத்துவவாதிகள் உலகாயதத்தை மறுப்பதற்காக உண்மையை மறுத்தார்கள். தென்னிந்திய உலகாயதத்தைப் பற்றி மேலும் ஆராய்தல் அவசியம். பிற்காலத் தத்துவ நூல்கள் தவிர சித்த நூல்களே யும் ஆராய்தல் வேண்டும். சில உலகாயத தத்துவக் கோட்பாடுகள் சித்தர் பாடல்களில் உள்ளன. ஆளுல் சைவ சித்தாந்த கருத்துகளோடு கலந்தே காணப்படு கின்றன. உலகாயதக் கொள்கைகளுக்கும், சைவ சித்தாந்த் ஆன்மீகக் கொள்கைகளுக்கும் சித்தர் பாடல்களுக்கும் உள்ள முரண்பாடுகளே தத்துவச் சூழ்நிலை, கருத்து வளர்ச்சி, வரலாற்றுப்போக்கு என்ற ரீதியில் ஆராய்ந்தால் தமிழ் நாட்டுத் தத்துவ அறிவுக்குப் பெரும் பயன் விளையும். 227