பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரபக்க லோகாயதம் (பரபக்கம் என்ருல் எதிரியின் கூற்று என்பது பொருள். தமிழ் நாடடுத் தத்துவவாதிகள் தமது எதிரிக்னின் தத்துவக் கருத்துக்களே இப்பெயரால் அழைத்தார்கள். சைவசித்தாந்த நூல்கள் சைவ சித்த் ந்தத்திற்கு எதிரான தத்துவங்களைப் புறச் சமகங்கள் என்றும் பரபக்க வாதங்கள் என்றும் கூறும். உலகாயதம், பொளத்தம், சமணம் முதலிய தத்துவங்கள் சிவஞான சித்தியாரில் பிறப் புறச் 'சமயங்கள் என்றும் வேதங்களைப் பிரமான நூல் களாக ஒப்புக்கொள்ளும் சைலம் அல்லாத சமயங் களேப் புதச் சமயங்கள் என்றும் சைவத்தோடு பேரும் பான்மை உடன்படும் சமயங்களே அகச்சடி உங்கள் என் தும் கூறுகிறது. பரபக்கம் என்பதனை வட நாலார் பூர்வ பட்சம் என்றழைத்தனர். பிற்கால இந்தியத் தத்துவ நூலார் தத்துவ விளக்க நூல்களே எழுதியபோது ஒரு விவாத முறையைப் பின்பற்றினர். தம் முடைய கூற்றை விளக்குவதற்கு முன்னர், தமது தத்துவத்திற்கு எதிரான தத்துவங்களே, அவ்வத் தத்துவவாதி கூறுவதுபோல முதலில் கூறி, பின்னர் அத்தத்துவத்திற்குத் தடைகளைக் கூறி, இத்தடை களுக்குத் தம் தத்துவமே விடையளிக்கிறது என்று: கூறுவார்கள். இவ்வாறு எதிரிகளுடைய தத்து வத்தை அவர்கள் கூற்ருகவே கூறுவது பூர்வபட்சம் எனப்படும். இதுவே பல தத்துவ நூல்களில் முதற் பகுதியாக இருக்கும். இதன் பின்னர் பூர்வ பட்சக் கூற்றை எதிர்த்து வாதிப்பார்கள், இது இரண் 罗器貌