பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 அக்கினி, இமாலயமலையடிவாரத்தில் அதனை வைக்கும்படி சொன்னான், அவள் அவ்வாறே செய்தாள். அக்கினியின் விதை தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களாக மாறிற்று. இமாலயமலை பொன்மலையாக மாறியது: இவ்வுலோகங்கள் ஒன்றுசேர்ந்து குமரன் பிறந்தான். ரிஷிகள் அவனை வளர்க்க கிருத்திகை தேவியரை அமர்த்தினர்கள். அவனுக்கு ஆறுமுகங்கள் உண்டாயின. இச்செய்தியை இராமான்னத்தில் இராமன் மிதிலை செல்லும் வழியில் இலக்குவனுக்குக் கூறுகிருன். இங்குக் கவனிக்க வேண்டியது எதிரிகளோடு போராடக் சக்தி வாய்ந்த ஒரு சேனபதியைத் தேடினர்கள். இதற்குக் காரணம் என்னவென்பதை பிற்பகுதியில் விளக்குவோம். பல போர்களில் தோற்றவன் இந்திரன் என்று கதைகள் எழுந்துவிட்டதால் புதிய சேனபதியொருவனைத் தோற்று விக்க வேண்டியதாயிற்று. இயற்கைச் சக்திகளில் தீயின் வலிமையையும் காட்டாற்றின் வேகத்தையும் சேர்ந்து ஒரு சக்தியுள்ள் தெய்வத்தை கற்பனையில் இனக்குழு மக்கள் (Tribal People) படைத்தனர். அதனையே கதையாகவும் புனேந்தனர். இதுதான் இராமாயணத்திற் காணப்படும் முதல் நிலைக் கதை இதன் விரிவைப் பாரதத்தில் காண்கிருேம். பாரதத்தில் வரும் ஸ்கந்தன் கதை வருமாறு : இக் கதை வனபர்வத்தில் 233 முதல் 232 முடிய வரும் அத்தியாயங்களில் காணப் படுகிறது. இந்திரன் தனது சேனை தானவர் என்னும் அசுரரிடம் தோற்று விட்டதை நினைத்து மனம் சோர்ந்தான். இச்சேனையைக் காப்பாற்றும் வீரன் ஒருவனைத் தேடினன் : இவ்வாசையோடு மந்தர மலைக்குச் சென்ருன். அங்கு ஒரு தினக்குரலேக் கேட்டான். தன்னக் காப்பாற்ற வேண்டு மென.அக்குரல் கூறியது. குரல் வந்த திசையில் நோக்கிய பொழுது கேசி என்னும் அசுரன் ஓர் அழகிய பெண்ணை ஒரு 30