பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிந்து கொள்ள முடிவதில்லை. உலகாயதம், சாருவாகம் இத்திவாதம் என்று பிற தத்துவ நூலாரால் அழைக்கப்படும் பொருள் முதல் வாதத்தின் ஆசிரியர்கள் என்று பிரகஸ்பதி 4ம் சருவாகினும் கூறப்பட்ட போதிலும் அவர்களுடைய நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. 8 ஆம் துர்திருன் டில் வாழ்ந்த புரந்தரர் என்பவர் லே கா.தர் என்று கருதப்பட்டார். ஆளுல் அவருடைய நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. தற்காலத்தில் லோகாயத நூல் என் து ஒன்று சண்டுபிடிக்கப்பட்டது. ஆளுல் பொருள் முதல்வாத்சி கருத்துக்களைக் கூருமல், எல்லாத் தத்துவக் கருத்துக்கள்ேயும் எதிர்க்கும் சமயவாதக் (agnosticism) கூற்றுக்கன் விளக்குகிறது. எனவே உலகாயதர்கள் எழுதிய உலகாயத நூல் எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் மஹாபாரதம் முதல், சிவஞான சித்தியார் வரை எல்லாத் தத்துவ விளக்க நூல்களும் லோகாயதத்தைப் பூர்வபட்சமாகக் கூறி எதிர்க்கின்றன. எனவே தமது பிரம்ம வாதிகள், மாயாவாதிகள், சமணர்கள், பெளத்தர்கள், அத்துவைதிகள், சைவ சித்தாந்திகள் ஆகிய கடவுள் நம்பிக் கையுடையவர்கள், ஆன்மீக வாதிகள், கருத்துமுதல் வாதிகள் அனைவரும் லோகாயதத்தை எதிர்க்கிருர்கள். அவ்வாறு எதிர்ப்பதற்காக முதலில் பூர்வபட்சமாக லோகாயதம் அல்லது பூதவாதத்தை, அவ்வத்தத்துவ வாதியின் கூத்ருகத் கூறுகிருர்கள். இதுவே பூர்வபட்ச லோகாயதம். இப்பூர்வ பட்சக் கூற்றுக்களின் ஒற்றுமையான அம்சங் களே ஒப்பு நோக்கித்தான் பண்டைய உலகாயதத்தைப் புனர் திர்மாணம் செய்ய வேண்டும், அதன் பின்னர் இக்கருத்துக் களைப் பெளத்தர், சமணர், வைதீகச் சமயவாதிகள் எந்த வாதங்கள் கொண்டு எதிர்க்கிரு.ர்கள் என்று கண்டு, அக்கருத்துக்களில் அவர்கள் தத்துவங்களுக்கு எதிரான கூறுகள் எவையுள்ளன என்பதை எதிர்மறையனுமானத்தால் அறிய வேண்டும். 盛器器