பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மாதிரியான புனர்நிர்மான ஆய்வுகளை ஜெர்மானிய தத்துவாசிரியர் வால்டர் ரூபனும், இந்தியத் தத்துவாசிரியர் தேவி பிரசாத் சாட்டோபாத்யாயாவும் செய்துள்ளனர். அவர்கள் சம்ஸ்கிருத மூலநூல்களின் சான்றுகளே ஆராய்ந் துள்ளார்கள். நான் முக்கியமான மூன்று தமிழ் தத்துவ நூல்களை ஆராய்ந்து, அந்நூல்கள் பூர்வபட்சமாகக் கூறும் லோகாயதத்தின் ஒற்றுமையான கூறுகளையும். வேற்றுமை வான கூறுகளையும் சுட்டிக்காட்ட முயலுவேன். மேலும் அவர்கள் பூர்வபட்ச லோகாயத்தை மறுத்துக் கூதும் வாதங்களைக் காட்டி, நவீன விஞ்ஞானத்தின் துணைகொண்டு அவர்களது மறுப்புக்களே மறுக்கவும் முயலுவேன். இவ் விரண்டு நோக்கங்களே இக்கட்டுரையின் ஆய்வு எல்லே. தான் மூன்று நூல்களின் பூர்வபட்ச லோகாதத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுவதாக முன்னர் கூறினேன். அந்நூல்கள் மணிமேகலை, நீலகேசி, சிவஞான் சித்தியார், இவற்றுள் மணிமேகலை, கி, பி, மூன்ரும் நூற்ருண்டிற்கும் இரண்டாம் நூற்ருண்டிற்கும் இடைப்பட்டதென இலக்கிய வரலாற்ருய்வாளர்கள் கதுகின்றனர்: மணிமேகலேயில் காணப்படும் அளவை முறைகள் (logic) பேளத்த அளவில் ஆசிரியரான திண்ணுகரு.ை நூல்களேப் பின்பற்று வதால், இது திண்ணுகருடைய காலத்திற்குப் பிற்பட்டது என்பது என் கருத்து. திண்ணுகருடை காலம் ஐந்தாம். ஆரும் நூற்ருண்டு என்று கணிககப்பட்டுள்ளது. மணிமேலே வின் காலமும் ஆரும் நூற்ருண்டாகலாம். எவ்லாமுயினும் அது ஏழாம் நூற்ருண்டிற்குப் பிற்பட்டதாக இருக்க முடியாது. ஏனெனில் பெனத்து சமண சமயங்களே எதிர்த்த பத்திவெள்ளம் அப்பர், ஞானசம்பந்தர் காலத்தில் எழுச்சி பெற்றுவிட்டது. பெருங்காப்பியம் எழுதுகிற, ஊக்கம், பெளத்தம் வலுவிழந்த கால்த்தில் ஏற்பட்டிருக்க முடியாது 7ஆம் நூற்ருண்டில்தான் ஹுயன்சாங் என்ற சீன பெளத்த பிக்கு, பெளத்த சமய நூல்களைத் திரட்டிக் கொண்டுபோகவும். இந்திய நாட்டு பெளத்த சமயப்பிரிவு களின் கொள்கை வேறுபாடுகளை அறிந்துகொள்ளவும் 284